எல்லாத்துலயும் ஒருவிதமான தயக்கம், ஜெயிக்க முடியுமானு சந்தேகம், எப்போதும் போட்டியாளர்களை பற்றின மலைப்பும் நிறைஞ்சவங்க லோயர் மிடில்கிளாஸ் பையன்கள்.
அப்படிப்பட்டவஙளுக்கு தோனி மாதிரி ஒருத்தன் குடுத்தது ஜெயிக்கறதுக்கான பெரிய நம்பிக்கையை. தோனியோட வெற்றி தன்னுடையதா பலரும் நினைக்க காரணமும் அதுதான்.
சின்ன ஊர்களை சேர்ந்தவங்களுக்கு சின்ன வயசுலருந்தே எதுவுமே அவ்வளவு சுலபமா கிடைச்சிடாது. ஒவ்வொன்னுக்கும் போராடணும். போராடினாதான் மேலே வரமுடியும். அந்த போராட்டகுணம்தான் தோனி.
நம்மை சுத்தி பெரிய பெரிய திறமைசாலிகள் இருக்கலாம்... நாம ரொம்ப சாதாரண பின்னணில இருந்து வந்தவங்களா இருக்கலாம்... நம்மோட பயணம் போராட்டம் நிறைஞ்சதா இருக்கலாம்... என்னவும் இருக்கட்டுமே... ஆனால் மைதானத்துல இறங்கிட்டா நம்ம ஆட்டம் மட்டும்தான் பேசணும்னு கத்துக்குடுத்தவன் அவன்தான்.
ஓய்வெடுங்க தோனி... மைதானத்துக்கு உள்ளயும் வெளியேயும் எங்களுக்காக நிறைய பண்ணிருக்கீங்க!