Pages

28 July 2020

நாம் ஏன் உடற்பயிற்சிகளைக் கைவிடுகிறோம்?




நாம் உடற்பயிற்சிகளை கைவிடுகிறோமா?

இதைப் பலவிதங்களில் புரிந்துகொள்ளலாம். நம் வாழ்க்கை முறையில் இருந்தே பல்வேறு காரணங்களால் உடற்பயிற்சிகளை முற்றிலுமாகக் கைவிடுகிறோம். ஆரோக்கியமாக இருக்கவேண்டிய நிர்பந்தத்தால் உடற்பயிற்சியைத் தொடங்கி பிறகு பல்வேறு காரணங்களால் கைவிடுகிறோம். உடற்பயிற்சி மீதான புரிதலின்மையால் கைவிடுகிறோம். உடற்பயிற்சி குறித்த அச்சத்தால் கைவிடுகிறோம்.

இப்படிப் பலநேரங்களில் உடற்பயிற்சிகளை நம்மிடமிருந்து எப்பாடுபட்டாவது விலக்கிவைக்கவே போராடுகிறோம். அன்றாட வாழ்வின் தவிர்க்கவியலாத அங்கமாக இருக்கவேண்டிய உடற்பயிற்சியை திணிக்கப்பட்ட ஒரு சம்பவமாகவே பார்க்கப்பழகி இருக்கிறோம்!


இருப்பினும் அனைவருக்குமே கட்டுக்கோப்பான ஆரோக்கியமான உடல் மீது ஆசை இருக்கத்தான் செய்கிறது. ஆனாலும், ஏன் எல்லோராலும் தொடர்ச்சியாக உடற்பயிற்சிகளை செய்ய முடிவதில்லை.

அன்றாட நடைபயிற்சியைத் தொடங்கினாலும் கூடத் தொடர்ச்சியாக ஒருவாரத்திற்கு மேல் செய்ய முடியாமல் போவது ஏன்? இந்தத் தோல்விகளுக்குப் பின்னால் இருக்கிற உடல், மனம், பழக்க வழக்கக் குறைபாடுகள் என்னென்ன என்பதை இந்த நூலில் என் சொந்த அனுபவங்களின் மூலமாகவும் அறிவியல்பூர்வமாகவும் ஆராய முயற்சி செய்திருக்கிறேன். அத்துடன், இந்தக் குறைபாடுகளை சரிசெய்து எவ்விதமான உடற்பயிற்சியாக இருந்தாலும் அதை தொடர்ச்சியாக செய்வதற்கான எளிய வழிகளையும் தீர்வுகளையும் முன்வைத்திருக்கிறேன்.

இந்த நூல் உங்களை ஒரே நாளில் கட்டுமஸ்தானாக மாற்றிவிடாது. ஆனால் அடுத்த முறை உடற்பயிற்சிக்குச் செல்லும்போது திட்டமிடலோடு செல்ல உதவும். உடல் ஆரோக்கியத்தின் தொடர் ஓட்டத்திற்கு உங்களைத் தயார் செய்யும். இந்நூலை வாசித்து அப்படி ஓர் உந்துதலைப் பெற்று உங்களால் ஓர் உடற்பயிற்சியை மூன்றுமாத காலத்திற்கு மேல் செய்ய முடிந்துவிட்டாலே எனக்கு மிகப்பெரிய வெற்றிதான்!

இது உடல் ஆரோக்கியத்தில் அக்கறையுள்ள அனைவருக்குமான நூல்.

படியுங்கள் அன்பானவர்களோடு பகிர்ந்துகொள்ளுங்கள்.

****

"நாம் ஏன் உடற்பயிற்சிகளை கைவிடுகிறோம்..." புத்தகத்தை இங்கே வாங்கலாம்.


https://www.amazon.in/gp/product/B08DM7SB1S/ref=dbs_a_def_rwt_bibl_vppi_i0