19 April 2011
சமகால பிட்டுப்படங்கள் - சில சிந்தனைகள்
இணையப்புரட்சி உச்சகட்டத்தினை எட்டியிருக்கும் இக்காலத்திலும் பிட்டுப்படங்களை தியேட்டருக்கே சென்று பார்ப்பவர் எண்ணிக்கை குறைந்தபாடில்லை. வரிசையாக வெளியாகும் பிட்டில்லா பிட்டுப்படங்களே அதற்கு சான்றாக நம் கண்முன்னே நிற்கின்றன. அத்தனை பிட்டுப்படங்களினையும் ஒன்றுவிடாமல் எப்பாடுபட்டாவது பார்த்துவிட்டு வெளியே வருகிற சராசரி தமிழ் ரசிகனின் முகத்தை எப்போதாவது பார்த்ததுண்டா? எதையோ இழந்த பெரும் ஏக்கப்பெருமூச்சும், சூம்பித்தொங்கிய தலையும், விரகமெறிய எதையோ தேடுகிற கண்களுமாக மெய்புல உலகின் மீதான தீராக்கோபத்தோடு அரங்கினை விட்டு வெளியேறுகிற துர்பாக்கிய நிலையை காண இயலும். என்ன காரணம். ஏனிந்த ஏக்கம். பிட்டுப்பட ரசிகர்களின் இச்சோகத்திற்கு காரணம்தான் என்ன? பிட்டுப்படங்கள் குறித்த தவறான கருத்தாக்கங்களும் அதற்குபின்னாலிருக்கிற நுண்ணரசியலும்தான் என்ன?
பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பு பிட்டுப்படவுலகை ஆண்டுகொண்டிருந்த ஏடி ஜோய், ஜெய தேவன் மாதிரியான அதிசிறந்த முற்போக்கு இயக்குனர்களும், ஷகிலா,சிந்து,மரியா,ஷர்மிலி முதலான நடிப்பிற்சிறந்த முற்போக்கு நடிகையரையும் எங்கு தொலைத்தோம். படைப்பூக்கமில்லா சுரணையில்லாத பிட்டுப்படங்களின் காலம்தான் தொடங்கிவிட்டதா என்ன? என்று மெய்யுணர்வினால் எழுகிற தர்க்கரீதியிலான அக்கேள்வி ஒவ்வொரு ரசிகனின் உள்ளத்திலும் எழக்காரணம்தான் என்ன?
கடந்தவாரத்தில் வெளியான தேவதாசியின் கதை என்னும் பிட்டுப்படத்திற்குத்தான் எத்தனை அமர்க்களமான போஸ்டர்கள் ஒட்டப்பட்டன. தினத்தந்தியில் வெளியான மோனிகாபேடியெனும் காரிகையின் புகைப்படம் பிட்டுப்பட ரசிகர்களின் உள்ளத்திளே புகுந்த எறும்பாக மொய்க்கத்தொடங்கியது. ஐபிஎல் தேர்தல் முதலான புறக்காரணிகளால் தமிழ்த்திரையுலகம் நிறையவே சோம்பிப்போய் கடந்து இரண்டு வாரங்களில் மாப்பிள்ளை தவிர்த்து எப்படமும் வெளியிடப்படவில்லை.
காரணம்? இப்புறக்காரணிகளால் ரசிகர்கள் யாருமே தியேட்டருக்கு வரவாய்ப்பில்லாமல் போய்விடுகிற நிலை உண்டாகியிருக்கிறது. ஆனால் கூட தொடர்ந்து வெளியாகும் இப்பிட்டில்லா பிட்டுப்படங்களுக்கு கூட்டம் அம்முவதில் ஆச்சர்யமில்லை. தேவதாசியின் கதை மட்டுமல்ல, சாந்தி அப்புறம் நித்யா, துரோகம், குற்றம் நடந்தது என்ன முதலான பல திரைப்படங்களை உதாரணமாக கூற இயலும்.
இப்போதும் மெய்நிகர் உலகில் தனக்கான மிகச்சரியான பிட்டினை தேடி அலைகிற அதிசிறந்த ரசிகனாகவே நம்மில் பலரும் உலா வருகின்றோம்.
அப்படிப்பட்ட ரசிகனின் எதிர்பார்ப்பை ஈடுசெய்ததா இத்திரைப்படங்கள். இல்லை என்பதே பெரும்பாலானவர்ளின் பதிலாக இருந்துவிடுகிறது. ஆம் என்று சொல்லுபவர்களுக்கு பிட்டுப்படங்கள் குறித்த ரசனையோ இலக்கியரீதியிலான பார்வையோ உள்ளொளி தரிசனமோ இருப்பதில்லை என்பதும் திண்ணம். ‘படத்தின் இறுதிவரை பாருங்கள் இன்பம் நிச்சயம்’ என்றெல்லாம் தினத்தந்தியில் கட்டங்கட்டி காசுகொடுத்து விளம்பரம் செய்த போதாவது நம் மக்கள் அதையுணர்ந்து தப்பித்திருக்கலாம். ஆனால் பிட்டுப்படங்களின் மீதான தீராவெறியும் ஒரு நல்லபிட்டுக் கிடைக்காத என்கிற ஏக்கமும் இவர்களை ஐபிஎல்லினையும் தேர்தலினையும் புறக்கணித்து இப்படங்களை காணசெய்திருக்கிறது. கண்டபின் நோக செய்திருக்கிறது. இது யாருடைய குற்றம். இதுமட்டுமல்ல இதற்கு முன்பு வெளியான அனேக பிட்டுப்படங்களின் நிலையும் இதுவே.
அண்மைக்காலங்களிலே வெளியான படங்களில் துரோகம் என்னும் படம் ஓரளவு நம்மை கவர்ந்தாலும், அதிலே பிட்டுகளின் எண்ணிக்கையை குறைத்ததோடு படம் எதை நோக்கியும் பயணிக்காமல் கட்டவிழ்த்த கழுதையைபோல நகர்ந்தது பெருங்குறை. ஆனால் பழைய திரைப்படங்களோ கதை எதை நோக்கிப்பயணித்தாலும் அதன் இறுதி இலக்கானது பிட்டெனும் ஒன்றை முன்னுறுத்தியே நகருவதை கண்டிருக்கிறோம். அதிலும் ஷகிலா நடித்திருந்தால் படத்தில் இரண்டு பிட்டாவது உறுதி என்கிற மனோதைரியத்தினை அளித்த படங்கள் அவை. பிட்டே இல்லாத படங்களாக இருந்தாலும் தியேட்டர் அதிபர்களின் கருணையினாலே அவை நிகழ்ந்தேறுவதையும் கண்டிருக்கிறோம். நாயகனும் நாயகியும் சந்தித்தாலே அடுத்த காட்சியில் பிட்டு நிச்சயம் என்கிற அந்நம்பிக்கையை கொடுத்ததுதான் எது? ஆனால் இன்றோ இருவருமே ஓன்றாக கட்டிலில் புரண்டாலும் காதுகடித்தாலும்.. பிட்டென்ற ஒன்று வராது என நம்பத்தொடங்கியிருக்கிறான் மெய்நிகர் ரசிகன்.
இதில் யாருக்குமே மாற்று அபிப்பிராயமோ அப்பிரதிகள் மீதான விமர்சனமோ இருக்காதென நம்பலாம். ஷகிலாவின் பெரும்பாலான படங்கள் அனைத்துமே பாலியல் தொடர்பான சிக்கல்களை முன்னிறுத்துபவை. அவை ஒவ்வொரு இளைஞனின் நாடித்துடிப்பையும் அறிந்து உருவாக்கப்பட்டு பெரும் வெற்றிபெற்றவை. ஆனால் இன்று வெளியாகிற படங்களோ அதிவேக பணம் எனும் முதலீட்டிய ஒற்றை மதிப்பீட்டினையே குறியாக வைத்துக்கொண்டு இயங்குகின்றன.
பிட்டுப்படம் பார்க்கிற ஆவலோடு தியேட்டருக்கு வருகிற ரசிகனை ஏமாற்றி அவனுக்கு எதையுமே காட்டாமல் ஏமாற்றும் போக்கு தொடர்கிறது. இது பொதுவெளியில் இயங்குகிற சராசரி ரசிகனையும் அவனுடைய கலாப்பூர்வமான பார்வையையும் சிதைத்து அவனை பிட்டுகளே அறிந்திடாத சுரணையற்றவனாக மாற்றிவிடுகிற நிலையும் உருவாக காரணமாக இருக்கலாம். இதற்கான மாற்றுவழிகளை சிந்தித்து அழிந்துவரும் பிட்டுப்பட ரசனையையும் பாலியல் விழைவூக்க ரசனையையும் மேம்படுத்தும் படங்களையும் பணமெனும் ஒற்றை குறிக்கோளைவிடுத்து அனுதினமும் எடுத்திட சமகால இயக்குனர்கள் பிரக்ஞையோடு முன்வரவேண்டும். அல்லது அக்கால ஷகிலா படங்களை மறுபிரதியாக்கமோ அல்லது மறுதிரையாக்கமோ செய்யலாம்.
ஒவ்வொரு படத்தின் கடைசி காட்சிவரைக்கும் காத்திருந்து இதோ இப்போது பிட்டு வந்துவிடும், அதோ அப்போது பிட்டுவந்துவிடும் என்கிற எதிர்பார்ப்பினோடு காத்திருக்கும் ரசிகர்களின் கண்கள்தான் எவ்வளவு மகத்துவமானவை. அவனை ஏமாற்றுவது எவ்வளவு பெரிய பாவச்செயல். ஒவ்வொரு காட்சியிலும் மொக்கை ஃபிகர் வந்தாலும்.. பல்லு போன ஆயாவந்தாலும் ஒரு பிட்டுவராதா என்று எதிர்பார்க்கிற துர்பாக்கிய நிலையில் இன்றைய ரசிகன் இருக்கிறான். பாலுக்காக அழுகிற கன்றுக்குட்டிக்கு காளை மாட்டில் பால்குடி என உத்தரவிடுவது எவ்வளவு வன்கொடுமையானது. அதைப்போல இன்றைய ரசிகன் பிட்டுக்காக அலைகிற நிலையுள்ளது. இதனை தடுத்திட உடனடியாக தமிழ் கூறும் பிட்டுத்திரையுலகம் கூர்ந்து கவனித்து , சரியான திட்டங்களோடு முன்வராவிட்டால் , பிட்டென்றால் என்னவென்றே தெரியாத மரபுக்குணங்கொண்ட ஒரு சந்ததியை உருவாகிவிடக்கூடிய சாத்தியக்கூறுகள் அதிகமாய் தெரிகின்றன.