27 June 2009
டெர்மினேட்டர் , மாசிலாமணி , முத்திரை , மரியாதை - என்ன கொடுமை சார் இது!
மாசிலாமணி -
சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் வந்திருக்கும் நாலாவது படம் ( நாலாவதுதானா? ) . அதே ஆள்மாறாட்டக் கதை , அதே காதல்தான் , ஆனா வேகமும் விறுவிறுப்புமான திரைக்கதை . நிறைய கொண்டாட்டம். கலகல காமெடி. வழிய வழிய மசாலா. கொஞ்சூண்டு முகம் சுளிக்காத கவர்ச்சி. குத்துப்பாட்டு டான்ஸ் . ஏ டிபிகல் சன் பிக்சர்ஸ் திரைப்படம்.
''குடும்பத்தோட சினிமாவிற்கு போய் இரண்டு மணிநேரம் உற்சாகமாக பொழுதைக்கழிக்க''
இதான் சன் பிக்சர்ஸின் பார்முலாவாக இருக்கக்கூடும். சரியாக கில்லிபோல அடித்திருக்கிறார்கள். பக்கத்துச்சீட்டு வாண்டுகள் மற்றும் பெற்றோரின் எண்ணிக்கை உறுதிப்படுத்தியது. அதிலும் பாடல்களுக்கு குழந்தைகளின் ரியாக்சன் பயத்தை உண்டாக்கியது. (அடுத்த தலைமுறை பாவம்!)
மற்றபடி உலகத்தரம் , சிறந்த கதையமைப்பு , அருமையான நடிப்பு என்றெல்லாம் பாராட்ட ஒரு இழவும் படத்தில் இல்லை.
மாசிலாமணி - JUST FOR FUN. ஒரு வாட்டி மகிழ்ச்சியா குடும்பத்தோட பார்க்கலாம்
************
டெர்மினேட்டர் -4
இதுவரைக்கும் வந்த டெர்மினேட்டர் திரைப்படங்களிலேயே மகா மட்டமான திரைப்படம் இது. அர்னால்ட் நல்ல வேளை நடிக்கவில்லை. கிரிஸ்டியன் பேல் நம்மூர் ஜே.கே.ரித்தீஷ் ரேஞ்சில் மொக்கையாக நடித்திருக்கிறார்.
கதை தமிழில் பார்த்தாலே புரியவில்லை. இதில் ஆங்கிலத்தில் பார்த்த புண்ணியவான்கள் நிலை பரிதாபம்தான். அதானல் நோ ஸ்பாய்லர்ஸ். (கதை என்னவென்று தெரிந்தால்தானே சொல்வதற்கு ). ஒரு காட்சியில் 3டி அனிமேசனில் அர்னால்ட் தோன்றுகிறார்.(சரியாக நான்கு நிமிடங்கள்தான் ) . அற்புதமான கிராபிக்ஸ் . ஆறுதல்! . சுஜாதா எப்போதோ சொல்லியிருந்தார் அடுத்த பத்து வருடங்களில் திரைப்படங்களில் நடிக்க நடிகர்களின் தேவை இருக்காது என்று!
நிறைய கிராபிக்ஸ் , நிறைய ரோபோக்கள் , நிறைய துப்பாக்கிகள் (அதிநவீன! ) . டூமீல் டூமீல் டமால் டமால். மயிறு. தலைவலிதான் மிச்சம்.
இந்த படத்தின் இயக்குனர் MCG . பாவம் பிள்ளையார் பிடித்திருக்கிறார். அது குரங்காய் வந்திருக்கிறது.
மற்றபடி தியேட்டர் கேன்டீனில் வாங்கிய பப்ஸ் சூடு குறைவு.
டெர்மினேட்டர் 4 - இந்த படத்தை பார்ப்பதற்கு விஜயகாந்தின் மரியாதை திரைப்பட டிரைலர் பார்த்து செத்து போயிரலாம்.
*************
முத்திரை -
முடியல! அடபோங்கப்பா..
50 ரூவா தண்டம்.
*************
மரியாதை -
டிபிகல் விக்ரமன் படம். ஆனால் அதே டொயாங் டொயாங் பிண்ணனி இசை. அதே லாலா பாட்டு. அதே சோக பாட்டு .அதே குடும்பம். அதே மலையோரத்து குடிசை. என்னதான் புதுசு.
அப்பா-மகன் சென்டிமென்ட் . ( வாரணம் ஆயிரம் ஞாபகம் இருக்கா.. அதை விட நல்லா இருக்கு இது )
கட்டை குரலில் பேசினா வயசான விஜயகாந்த் , சாதா குரலில் அங் என பேசினால் இளைய விஜயகாந்த் என்பது அனைவருக்கும் தெரியும். இதில் அப்பா கட்டை குரல் மகன் அங்..! ஆனா முகம் சேம்!
மற்றிபடி லேடிஸ் ரசிக்கும் காமெடி , லேடிஸ் துரோகம் , லேடிஸ் சென்டிமென்ட் என்று விஜயகாந்த் நடித்த மெகாசீரியல் போல இருக்கிறது.
ஆனால் கொடுமை என்னவென்றால் தியேட்டரில் பல பெண்கள் குடும்பத்தோடு குழந்தை குட்டிகளோடு காண முடிந்தது.
விக்ரமன் தன் சக்ஸஸ் கதை ஃபார்முலாவை வைத்து இன்னும் ஆயிரம் படங்கள் எடுக்கக்கடவது. அநியாயம் ஒரே கதையை எத்தன வாட்டிதான் எடுப்பீங்க.. அழுதுருவேன்..
இரண்டரை மணிநேரம் வாய்விட்டு சிரித்து மகிழ அதி அற்புதமான திரைப்படம்.
சீரியஸ் காட்சிகளிலும் சிரிப்பு வருவது படத்தின் மிகப்பெரிய பலம். விஜயகாந்த் டான்ஸ் வெரிகுட்யா என்று ஜெர்மனியில் இருந்து வந்த ஒரு லேடிஸ் பேசிக்கொண்டு சென்றதே சாட்சி.
மரியாதை - செம காமெடி மச்சி.. ( யூத்துகள் நிறைய பேர் தியேட்டரில் பார்க்க முடிந்தது )
*******
இப்படியாக நான்கு மொக்கைப்படங்கள் பார்த்த விக்ரமாதித்யன் மீண்டும் முருங்கை மரத்தின் மீது ஏறி தூக்கில் தொங்கி செத்துப்போய் வேதாளமானான்.