30 April 2009
ஆனந்த விகடனில் லக்கிலுக்கு!
(ஏதோ ஒரு டாஸ்மாக்கில் யாருடைய சரக்கையோ கையில் வைத்துக்கொண்டு குடிக்காமல் போட்டோவிற்காக போஸ் மட்டும் கொடுக்கும் குடியென்றால் மிரண்டோடும் இரு நல்லவர்கள் - அதிஷா மற்றும் லக்கிலுக்)
தோழர் லக்கிலுக்கை உங்களுக்கு நான் அறிமுகப்படுத்த தேவையில்லை. வலையுலகில் திமுகவின் கொ.ப.செ என்று பலராலும் அறியப்பட்ட முதியவர். திமுக எப்போதெல்லாம் மண்ணில் விழுந்து புரள்கிறதோ அப்போதெல்லாம் திமுகவின் குட்டிமீசையில் மண் ஒட்டவில்லை என மார்தட்டும் பதிவுலக டைனோசர். ஒரு வளரும் காட்டெருமை. மிகச்சிறந்த எழுத்தாளாராய் ஆகப்போகிறவர். அவரது எழுத்துக்களைப்பார்த்தே வலையுலகில் பல நண்டு சிண்டு பதிவர்களெல்லாம் எழுத வந்திருப்பதாய் பலர் அவரிடம் சொல்வதாய் அடிக்கடி சொல்லிக்கொள்பவர்.
ஞானி முதல் சாணி வரை ஒன்றையும் விடாமல் அனைத்தையும் சுவாரஸ்யம் குன்றாமல் தன் வலையில் அனுதினமும் எழுதுபவர்.
அவரது ஒரு சிறுகதை , சிறுகதை என்றால் மிக மிக சிறிய ஒரு பக்க அளவிலான ஒரு கதை இன்றைய ஆனந்த விகடனில் (6-5-2009 இதழ் - பக்கம் 26)வெளியாகியுள்ளது. அது ஒருபக்க கதையாக இருந்தாலும் ஒரு பக்கா கதையாகத்தானிருக்கிறது. நான் படித்ததுமே அப்படியே ஷாக்காயிட்டேன்.
இன்னும் அவரது பல சிறுகதைகள் , பெரிய கதைகள், நாவல்கள் , கவிதைகள் லொட்டுகள் லொசுக்குகள் என பலதும் பல பத்திரிக்கைகளில் வெளிவர அவரது இஷ்ட தெய்வமான கருணாநிதியாணந்தாவையும் அழகர் மலை ஆண்டவர் அழகிரியையும் வேண்டுகிறேன்.
விகடனில் வெளியான அவரது ஒரு பக்க கதை கீழே.. படித்து பயன் பெறுங்கள்..
ம்ஹூம். இன்னும் எத்தனை நாளைக்குதான் அடக்கிக் கொண்டிருப்பது. இனிமேல் சத்தியமாக முடியாது!’ மனோகர் தூங்கமுடியாமல் அவஸ்தைப்பட்டான். “இனிமேல் நைட்டு பத்து மணிக்கு மேலே டிவியே பார்க்கக் கூடாது. பலான பாட்டுங்களா பார்த்து அவஸ்தை ஆயிடுது”.
மனோகர் 27, கன்னி கழியாத பையன். சென்னையில் பெரிய மென்பொருள் நிறுவனத்தில் வேலை. கைநிறைய காசு. ஊரில் அப்பா அம்மா. வார இறுதியில் பீர். தினமும் ஒரு கிங்ஸ் பாக்கெட். இதைத்தவிர பெரிய தப்புத்தண்டா ஏதுமில்லை. கொஞ்ச நாளாகத் தான் அந்த எண்ணம் வந்தது. “கன்னி கழிஞ்சுட்டா என்ன?”
இண்டர்நெட்டை மேய்ந்தான். தூக்கம் வராத பொழுதுகளில் இணையமே துணை. இரவுகளில் இவன் பார்ப்பது பெரும்பாலும் ‘பலான’ சைட்டுகள். மேய்ந்து கொண்டேயிருந்தபோது திடீரென அந்தப் பக்கம் திறந்தது. “ஓரிரவுக்கு பெண் வேண்டுமா?”. மனோகர் அவசரம் அவசரமாக அப்பக்கத்தை ஆராய்ந்தான். ஒரு கைப்பேசித் தொடர்பு எண் அளிக்கப்பட்டிருந்தது.
“ஹலோ நான் மனோகர் பேசுறேங்க. இண்டர்நெட்டில் இந்த நம்பரை பார்த்தேன்!”
“உடனே வாங்க” என்று காதில் தேன் ஊற்றிய குரல் பெசண்ட் நகரின் ஒரு அட்ரஸை சொன்னது.
“வந்துங்க... காசு”
“அதெல்லாம் அப்புறம் பேசிக்கலாம். ப்ளீஸ் கம் ஃபாஸ்ட்”
முதல் அனுபவம். யாரையும் ஆலோசிக்கும் மனநிலையில் இல்லை. பைக்கை எடுத்துக் கொண்டு நேராக பெசண்ட் நகருக்கு விட்டான். அவள் சொன்ன அப்பார்ட்மெண்ட் நவநாகரிகமாக இருந்தது. ‘இங்கு கூடவா கால்கேர்ள் இருப்பாள்?’
13-பி. காலிங்பெல்லை அழுத்தினான். கதவைத் திறந்தவள் கேட் விண்ஸ்லட் மாதிரி இருந்தாள். “வந்துங்க..” உளற ஆரம்பித்தவனின் உதடுகளை அழுத்தமாக பொத்தினாள் அவள் உதடுகளில்.
விடியும் வரை என்ன நேர்ந்தது என்றே மனோகருக்கு தெரியவில்லை. இறக்கை கட்டி வானத்தில் பறப்பதைப் போல உணர்ந்தான். அவளே அவனை குலுக்கி எழுப்பினாள். “எவ்வளவு?” என்று தயக்கமாக பர்ஸை திறந்துகொண்டே கேட்டான்.
“வாரத்துக்கு ஒருத்தருக்கு இலவசம். இந்த வார இலவசம் உங்களுக்கு” பதில் சொல்லி விட்டு வாசல் வரை இழுத்து வந்து வெளியே தள்ளினாள். அவசரமாக கதவைப் பூட்டினாள்.
படிகளில் உற்சாகமாக இறங்கினான். பைக்கை ஸ்டார்ட் செய்தான். பாக்கெட்டை அனிச்சையாக தொட்டுப் பார்க்க பர்ஸ் மிஸ்ஸிங். கையில் எடுத்த பர்ஸை பெட் மீதே வைத்தது நினைவுக்கு வந்தது. ”அய்யய்யோ. பத்தாயிரம் ரூபாய்க்கு மேல் இருக்கிறதே? க்ரெடிட் கார்ட்ஸ் வேற”
திரும்ப அவசரமாக ஓடினான். படிக்கட்டில் ஓட அவகாசமில்லை. லிஃப்டுக்குள் நுழைந்தான். “எத்தனையாவது ப்ளோர் சார்?” லிஃப்ட் ஆபரேட்டர் விடியற்காலையிலேயே பட்டையெல்லாம் அடித்து பக்திபரவசமாக இருந்தார்.
“13க்குப் போப்பா”
...................... முடிவை இன்றைய ஆனந்த விகடனில் 15 ரூபாய் செலவழித்து காண்க.. அல்லது ஒரு ரூபாய் செலவழித்து எனக்கு போன் செய்தால் நானே சொல்கிறேன்.
அதுவரை இப்போதைக்கு ஆபீஸில் களிம்பின்றி ஆப்புகள் அடித்துக்கொண்டிருப்பதால் உங்களிடமிருந்து விடை பெறுவது.. உங்கள் அதிஷா
29 April 2009
பிட்டுப்படம் பார்ப்பது எப்படி?
பிட்டுப்படங்கள் என்றாலே அனைவருக்கும் உள்ளுக்குள் அலாதி பிரியம் . என்னதான் அப்படிப்பட்ட படங்களின் மேல் ஆசை இருக்கும் அளவுக்கு அதை காணும் தைரியம் இருப்பதில்லை. ஏனோ நமது சமுதாய கட்டமைப்பு அவற்றைக்காணும் வாய்ப்பை அனைவருக்கும் அளிப்பதில்லை.ஆனாலும் இருபது வயது இளைஞன் முதல் அறுபது வயது பல்லில்லா கிழவன் வரை அனைவருக்கும் செய்வதை விட( என்ன செய்வது என நீங்கள் கேட்டால் இந்த பதிவு உங்களுக்கல்ல ஓடிவிடுங்கள் ) பார்ப்பதில்தான் ஒரு உற்சாகம்.
ரொம்ப சீரியஸாக இப்படிலாம் பதிவு போட்டா நான் தமிழின துரோகி ஆகிவிட நேரிடலாம். இருந்தாலும் வாலிப வயோதிக அன்பர்கள் பலரின் வேண்டுகோள் என்ன செய்ய?. ஒரு பிட்டுப்படத்தை முறையாக எப்படிப் பார்ப்பது என்பதை கற்றுத்தரும் கடமை தமிழ் கூறும் நல்லுலகை சேர்ந்த எனக்கு இருப்பதாய் முந்தாநாள் போன் பண்ணிய சுந்தரிலிருந்து அடுத்தவாரம் போன் செய்ய இருக்கும் சுரேஷ் வரை அனைவரது வேண்டுகோளும்.
முதலில் பிட்டுப்படங்களை பிட்டுப்படங்களாய் பார்க்காமல் அவற்றை ஒரு உன்னத அனுபவமாய் பார்க்க என்னவெல்லாம் செய்யலாம். வாங்க பதிவுக்கு போகலாம்.
பிட்டுப்படங்களில் பல வகைகள் உண்டு. டபிள் எக்ஸ்,டிரிபிள் எக்ஸ், ஆங்கிலம்,தமிழ்,மலையாள தமிழ்,தமிழ் மலையாளம், ஹிந்தி தமிழ்,தமிழ் ஹிந்தி இப்படி இன்னும் பல வகைகள் இருக்கின்றன. இவற்றில் டபிள் எக்ஸ் என்பது டபிள் எக்ஸ். டிரிபிள் எக்ஸ் என்பது டிரிபிள் எக்ஸ். இதற்கெல்லாம் கூட விளக்கம் உங்களுக்கு தேவைப்படும் பட்சத்தில் இது உங்களுக்கு ஏற்ற பதிவுதான்.
*****************************
*நேரம் இது மிக மிக முக்கியமானது. சில தியேட்டர்களில் காலைக்காட்சியில் மட்டுமே இது மாதிரி படங்கள் காட்டப்படும். அதிலும் ஊருக்கு ஒதுக்குப்புறமாக உள்ள இன்னும் சில மாதங்களில் மூடும் தருவாயில் இருக்கும் தியேட்டர்களென்றால் உசிதம். நான்கு ஷோவும் பிட்டுப்படங்கள் திரையிடப்படும் தியேட்டர்களை நாடுவது வீண். பிட்டுகளுக்கான உத்திரவாதம் இருக்காது. வெக்குனாப்புல போக நேரிடும். அதனால் முடிந்தவரைக்கும் காலைக்காட்சியை தேர்ந்தெடுத்துக்கொள்ளவும். (நேரம் 11லிருந்து 11.45 வரை மட்டுமே.. அதான்ல ஆபீசுக்கு லீவெல்லாம் போட வேண்டாம், ஒரு மணிநேர பர்மிஷனில் போய் வந்துவிடலாம்..;-)
* முதலில் டிக்கெட் எப்படி வாங்குவது என தெரிந்து கொள்ளவேண்டும். பிட்டுப்படம் இருக்கும் சாலையோரம் சகஜமாய் நடந்து சென்று.. யாரும் பார்க்காத போது சடக்கென்று உள்ளே நுழைந்து விட வேண்டியதுதான். ஒரு பாம்பு எப்படி புத்துக்குள் ஊர்ந்து ஊர்ந்து புசுக்கென நுழையுமே அது போல. உள்ளே சென்றதும் கவுண்டர் என்ற ஒன்று இருக்கும் ( கட்டாயமாக ஜாதி இல்லை! ) . அது டிக்கெட் வழங்குமிடம். அங்கே சென்று டிக்கெட்டை வாங்க வேண்டும் . ( முடியல!)
* ஒரே விலைதான் எல்லா டிக்கெட்டும் என்பதை மனதில் கொள்க. (பிட்டுப்பட தியேட்டர்களின் எழுதப்படாத விதி! விதினாலே அப்படித்தான் ) . சமீபத்திய விபரம் 20 ரூ எல்லா வகுப்பும் ( அட!!). படத்தை முழுமையாக பார்த்தபின் இது குறித்து இந்து பொந்து ஆயாவூட்டு சந்து என எதில் வேண்டுமானாலும் எழுதி நீங்கள் இழந்த பணத்தை மீட்கலாம். அல்லது கன்சுயூமர் கோர்ட்டுக்கும் போகலாம்.
*அதனால் மறுபேச்சு பேசாமல் எவ்வளவு கேட்கிறார்களோ அவ்வளவையும் கொடுத்துவிட்டு அங்கிருந்து நகர்ந்து விடுவது உத்தமம். இல்லாவிட்டால் நீங்கள் தியேட்டரிலிருந்து தேவையில்லாமல் வெளியேற்றப்படுவீர்கள். அதைவிட நம் குலத்திற்கு மிகப்பெரிய அவமானம் இருக்குமா! அதிலும் நீங்கள் கேட்ட காசை கொடுக்க வில்லையென உங்கள் குமட்டில் குத்து விழுவதை யாரேனும் பார்த்துவிட்டால், ஐயகோ...
*அதனால் வீட்டிலிருந்து கிளம்பும் போதே நிறைய பணமெடுத்துக்கொண்டு செல்லவும். அல்லது பணமுள்ள நண்பரை அழைத்துச்செல்லவும். செல்லும் வழியில் படத்தில் ஆறு பிட்டு ஏழு பிட்டு என ஏகத்திற்கு கப்சா விடவும். (பிட்டு வரவில்லை என்றால் சே கட் பண்ணிட்டாய்ங்க சார் என்று கழண்டு கொள்ளலாம்.)
* அதே போல் உள்ளே நுழைந்தவுடன் தியேட்டரின் மிக இருட்டான பகுதிக்குள் பதுங்கிக்கொள்ளவும். அது ஒரு பாதுகாப்பு யுக்தி அல்லது ராஜதந்திரம்.
*ஆர அமர அமர்ந்து கொண்டு ஒரு நீண்ட நெடிய பெருமூச்சு விட்டுக்கொள்ளவும். (சம்பிரதாயம்ப்பா). பக்கத்தில் இருப்பவர் விடாவிட்டால் முதுகில் தட்டி மூச்சுவிட சொல்லுங்கள்.
*எப்படியோ உங்களை தியேட்டருக்குள் அழைத்து சென்றாகிவிட்டது. ஆறு மணிக்கு படம் என்றால் அது ஆறு முப்பதுக்குத்தான் தொடங்கவேண்டும் என்பது தியேட்டர் உரிமையாளரின் விருப்பம். அதனால் அரைமணிநேரம் வாசல் பக்கம் யார்யார் வருகிறார்கள் என அரை வெளிச்சத்தில் பார்த்து ரசிக்கலாம். (உங்கள் உற்றார் உறவினர் வந்தால் உசாராக உதவுமே )
*இப்போது புரிந்திருக்கும் நான் ஏன் உங்களை ஆரம்பத்தில் தியேட்டரின் இருட்டான பகுதியில் அமரச்சொன்னேன் என்று.
*அந்த அரை மணி நேர இடைவெளியில் லத்தீன் அமெரிக்க மற்றும் இத்தாலிய ரோமானிய இசையெல்லாம் , பாதி உடைந்து போன ஸ்பீக்கரில் போடுவார்கள் அதை ஆத்மார்த்த அனுபவமாக, பழுத்து வெடிக்க காத்திருக்கும் பலாப்பழத்தைப்போல கேட்டு ரசிக்க வேண்டும். (இல்லாவிட்டால் குமட்டில் குத்துவேன்) . (விசிலடிச்சான் குஞ்சுகளுக்கு இதையெல்லாம் ரசிக்க தெரியாது, நம்மைபோன்ற அறிவுஜீவி குஞ்சுகளுக்கு மட்டும்தான் தெரியும். நாம் எதற்கு தியேட்டருக்கு வந்திருக்கிறோம் என்று.. குஞ்சு என்றால் கோழிக்குஞ்சு,ஆமைக்குஞ்சு,மீன் குஞ்சு என பொருள் கொள்க)
*ஸ்ப்பாடா ஒருவழியாக படம் போட்டாச்சா! , இங்கேதான் நாம் கவனிக்கவேண்டிய மிகமுக்கியமான விடயம் வருகிறது. ஷகிலா படங்களில் முதல் காட்சியில் சாமி கும்பிடும் காட்சியோடு படம் துவங்கினால் படத்தில் 100 சதவீதம் குறைந்தது ஆறிலிருந்து பத்து பிட்டுகள் உத்திரவாதம். அதனால் வெறும் சாமி கும்பிடும் காட்சிதானே என பப்பரப்பா என பராக்கு பார்த்துக்கொண்டிருக்காமல் படத்தில் கவனமாய் இருக்க வேண்டும்.
*படத்தில் ஷகிலாவின் கணவனாகவோ அல்லது முக்கிய பாத்திரம் (கதாநாயகியின்) கணவனாக ஒரு அரைமண்டை கிழம் இருந்தால் வெற்றி உங்களுக்கே..! ஆறு பிட்டு உத்திரவாதம்.
*படம் ஆரம்பித்த பின் முன் சீட்டு ஏன் ஆடுகிறது, பின்னால் என்ன முனகல் சத்தம், ஐயோ குய்யோ என்று யார் கத்தினாலும் எதற்கும் தலை அந்த பக்கம் இந்த பக்கம் திருப்பிடாதீங்க.. அதற்கான காரணங்கள் அனுபவித்து உணர வேண்டியது.பக்கத்து சீட்டில் அமரும் நபரை உன்னிப்பாக கவனிக்கவும். அவர் உங்களைப்பார்த்து சிரித்தால் திருப்பி சிரித்து விடாதீர்கள். மீறி சிரித்து ஏதும் புண்பட்டால் கம்பெனி பொறுப்பாகாது.
*இன்டர்வெல்லுக்கு முன்னால் அதாவது படம் துவங்கி சரியாக அரைமணிநேரத்திற்குள் நிச்சயம் ஒரு மிக நீண்ட பிட்டு கட்டாயம் இடம் பெறும் , தப்பி தவறி கூட படம் துவங்கியதிலிருந்து இன்டர்வெல் வரை ஆய்,சூச்சூ, உச்சா, கிச்சா ,தம்மு எதற்கும் போய் விடாதீர்கள். மிக முக்கியமான பிட்டை இழக்க வேண்டியிருக்கும்.
*இன்டர்வெல்லுக்கு பிறகு பொதுவாகவே எந்த தியேட்டரிலும் பிட்டுகள் போடுவதில்லை. சப்பையான கிளைமாக்ஸ் மட்டுமே.
அதை பார்ப்பதை விட இன்டர்வெல் முடிந்து படம் துவங்கியதும் , தியேட்டரை விட்டு அரக்க பரக்க பின்னங்கால் பிடறியில் பட ஓடி விடுவது நல்லது. தியேட்டரும் இருட்டாக இருக்கும். யார் கண்ணிலும் பட வாய்ப்பில்லை.
*இப்படி ஒரு வழியாக பிட்டுப்படத்தை பார்த்து முடித்ததும் . வீட்டிற்கு சென்றதும் பழனி ஆண்டவரை வணங்கி நெற்றி நிறைய பட்டையிட்டு பேசாமல் படுத்து உறங்கவும். இறைவன் அருள் உங்களுக்கே சொந்தமாகும்.
***************************
பின் குறிப்புகள்.
*ஆங்கில பிட்டுப்படங்கள் தற்காலத்தில் அதிகம் வருவதில்லை. வந்தாலும் அவற்றில் பிட்டுகள் மகா மொக்கையாக இருப்பதால் அவற்றை பார்ப்பதை முடிந்தவரை தவிர்க்கலாம்.
*அதே போல இந்தி பிட்டுப்படங்களில் .. பிட்டுகள் இடம் பெற்றாலும் மலையாளத்தை நெருங்கவே முடியாது. நெருங்கினாலும் இந்திக்காரர்கள் உணவைப்போல அதாங்க சப்பாத்தி போல இருக்கும். அதற்கு மேல் உங்களிஷ்டம்.
*சீன , கொரிய பிட்டுப்படங்களில் எனக்கு தெரிந்தவரை அலெக்ஸான்டரா வை அடித்து கொள்ள வேறு படமே இல்லை எனலாம். மற்ற படி அவை ஒரு உன்னத அனுபவத்தை தரவல்லது. சாப்ட் பிட்டு (soft biitu ) பார்க்க விரும்புபவர்கள் முயற்ச்சிக்கலாம்.
**************************
இது தவிர , டிவிடி வடிவத்தில் கிடைக்கும் பிட்டுப்படங்கள் பார்க்கும் போது எப்படி பார்க்க வேண்டும் என உங்களுக்கு நான் சொல்லித்தர தேவையில்லை. முடிந்த வரை படத்தை மியூட்டில் வைத்து ஒரு கையில் ரிமோட்டை பிடித்துக்கொண்டு காதை கூர்மையாக வைத்துக்கொண்டு பார்க்கவும். யாராவது வந்தால் அணைத்துவிட ( டிவியை!) வசதியாக இருக்கும்.
ஆனால் மிகச்சிறந்த ஆங்கில,மாற்றுமொழி பிட்டுப்படங்கள் வாங்க ஒரு மிகச்சிறந்த வழியுண்டு, சாரு நிவேதிதா மாதிரி கிம் கி டுக்... டின்டோ பிராஸ், சிரிலோ கிரிஸ்கோஸ்கி,அந்தோனி போர்ஜெஸ் போன்றோரின் படங்களை பார்ப்பவரை நண்பராக்கி கொள்ளுங்கள் . அவர்கள் பார்க்கும் படங்களின் பெயர் மட்டும் வாங்கிக்கொண்டு அதை போய் டிவிடி கடையில் கேளுங்கள். அவர் நிச்சயம் இரண்டில் ஒன்று தருவார், ஒன்று அந்த படத்தின் டிவிடி அல்லது சாராமாரியான அடி உதை.. இனிமே இந்த கடை பக்கம் வந்த மவனே சாவடிதான் என்கிற இலவச வசனத்தோடு.. ( சமயங்களில் சார் இந்த படமெல்லாமா பாக்கறீங்க பெரிய ஆள்சார் என்று பாராட்டவும் நேரிடலாம் அதற்கு கம்பேனி பொறுப்பல்ல)
***********************
இந்த பதிவுக்கு கிடைக்கும் வரவேற்ப்பை பொறுத்து அடுத்ததாக பிட்டுப்படம் எடுப்பது எப்படி என்றொரு பதிவும் இடலாம் என்கிற எண்ணமும் உண்டு.
23 April 2009
சந்தித்தவேளையும் சரக்கடித்த லீலையும்...!
தமிழகத்தில் அண்ணாச்சிகள் எப்போதுமே ஏதாவது ஒரு வகையில் பிரபலமாய் இருப்பதை பார்த்து வியந்திருக்கிறேன். என் தெரு முனை அண்ணாச்சிகடை அண்ணாச்சியிடமிருந்தே துவங்குகிறேனே!. அடுத்து திருமங்கலம் இடைத்தேர்தலில் எழுநூறு ஓட்டுக்கள் வாங்கி சாதித்த ஒரு அண்ணாச்சி இருக்கிறார்.அவரைப்பற்றியல்ல.. துணிக்கடை அண்ணாச்சி ஒருவர். இட்லிக்கடை அண்ணாச்சி ஒருவர். சோறு போட்டு கல்வி கொடுத்த அண்ணாச்சி ஒருவர். படித்து முடித்த இளைஞருக்கு வேலை வாங்கித்தரும் அண்ணாச்சி ஒருவர். அண்ணாச்சிகள் வரலாற்றில் மிகமுக்கியமான இடத்தை வகிப்பவர்கள். இங்கே சாதீய அடிப்படையில் இதை சொல்லவில்லை. எங்கள் தெருவில் கடை வைத்திருக்கும் அண்ணாச்சி ஒரு மலையாளி என்பதே இதற்கான சாட்சி.
எதற்கு இவன் அண்ணாச்சிகளின் புகழ் பாடுகிறான். இப்போது என்ன வந்துவிட்டது அண்ணாச்சிகளுக்கு! எதற்காக அண்ணாச்சிகளை இழுக்கிறாய் நீயும் ''எங்கே அண்ணாச்சி'' என்று ஏதேனும் தொடர் எழுதப்போகிறாயா என்றெல்லாம் எண்ணங்கள் எழக்கூடும். இது அதற்கல்ல . அரபு நாட்டில் அப்படி ஒரு அண்ணாச்சி இருக்கிறார். அவரை முதல் முதலாக சந்தித்தது சென்னை தி நகர் பனகல் பார்க்கில்தான். மிக சுவாரஸ்யமானவர். பல அஜால் குஜால் கதைகளையும் அதி அற்புதமான கவிதைகளையும் ( கவிதைகளில் அஜால் குஜால் இருப்பதே இல்லை) வைத்திருப்பவர். பழக இனியவர். இதற்கு மேல் புகழ்ந்தால் கெட்ட வார்த்தைகளில் வசை பாடுபவர். மூத்த , பிரபல, பீத்த , பீதாம்பர என்று எந்த அடைமொழியில் அழைத்தாலும் அவரும் ஒரு பதிவர்.
அவர்.......... ஆசீப் அண்ணாச்சி... ( ஓகே ஓகே கைத்தட்டினது போதும். கூல் டவுன் மக்களே அவருக்கு அதுலாம் புடிக்காது.. அடிப்பாரு)
அவர் தன் பாசமிகு பதிவுல தம்பிகளைக் காண அரபு நாட்டில் இருந்து பறந்தோடி வருவதாய் பட்சி சொல்லவில்லை என் பாசமிகு அண்ணன் பாலபாரதி சொல்லுகிறார்.
அதனால் என்ன?
இந்த வாரம் சனிக்கிழமை பதிவர் சந்திப்பு மக்கா எல்லாரும் ஒழுங்கா வந்து சேருங்க..
இடம் - சேம் பிளேஸ்தான் - காந்திசிலை தண்ணீர் இல்லாத குட்டை
டயம் - ஈவ்னிங் 5.30 லருந்து
என்னைக்கு - இதோ வர சனிக்கிழமை! ஏன்ப்பா சனிக்கிழம என்னப்பா தேதி 25-04-2009
ஆசிப் அண்ணன் எல்லாருக்கும் தன் கையாலே கரப்பான்பூச்சி விருதும் , அதைத்தொடர்ந்து சரக்கும் சைடிஷும் வாங்கிக்கொடுத்து தன் சொந்த செலவில் சூனியம் வைத்துக்கொள்ள ஆசைப்படுகிறார்.
( சரக்கு என்றால் டீ - சைட் டிஷ் என்றால் வடை அல்லது பதிவர்சந்திப்பு புகழ் போண்டா என்று பிகினி சித்தர் ஏழாம் நூற்றாண்டில் பாடிச்சென்றதை மறந்து விடாதீர்கள் நண்பர்களே)
*******************
சரக்கென்றதும் டக் கென உங்களுக்கு என்ன ஞாபகம் வரும். எனக்கு முதலில் வருவது வாந்தி. அடுத்து சாருநிவேதிதா. போதைக்கே புதிய பரிமாணத்தை தன் எழுத்துக்களின் மூலம் தந்தவர். தந்துகொண்டிருப்பவர். எத்தனையோ பேர் அவரை சாடினாலும் இகழ்ந்தாலும் காரித்துப்பினாலும் அவரது இணையதளத்தில் தினமும் வாசிக்கத் தவறுவதே இல்லை. நானும் அப்படித்தான். இணையத்தில் இயங்குகிற பெரும்பாலானோர் அப்படித்தான். பாவம் மனிதர் என்ன கஷ்டமோ என்னவோ தன் புத்தகங்களை குறைந்த விலையில் கூவி கூவி விற்கிறார். ஓசியில் நோகாமல் படிக்கும் பலருக்கும் காசு கொடுத்து புத்தகம் வாங்க வேப்பங்காயாய் கசக்கிறது. நானும் அப்படித்தான். என்னால் ஆயிரம் ரூபாய்கள் செலவளித்து அந்த புத்தகங்களை வாங்கி அவருக்கு உதவ முடியாதே! நான் அவரைவிடவும் உலகமகா ஏழை. அது உலகுக்கே தெரியும். இருந்தாலும் சாருவின் மீது அவர் பணக்கார நண்பர்களோடு மட்டுமே பழகுவார் என்கிற ஒரு விமர்சனம் இருக்கிறது. அது யாரோ சிலபல உத்தமதமிழ் எழுத்தாளர்கள் கிளப்பிவிட்ட வதந்தியாக இருக்கக்கூடும். அவரது நண்பரான நான் ஒரு பரம ஏழை, அவரைக்காட்டிலும்!. அதனால்.....
என் கம்பேனி தந்த கம்யூட்டரில் , என் கம்பேனி தந்த இன்டர்நெட் கன்க்சனில் இந்த பதிவிற்கு நடுவே நம் நண்பர் சாருநிவேதிதாவுக்காக ஒரு குட்டி விளம்பரம்.
மிகசமீபத்தில் வெளியான அவரது பத்து புத்தகங்கள் மலிவு விலையில் நமது வாசகர்களுக்காக.. வாங்கி படிங்க நண்பர்களே..
இங்கே முழுவிபரமும்.
****************
ஏப்ரல் மாதம் 23 ஆம் தியதி உலக புத்தக தினம். நம்மில் எத்தனை பேருக்கு தெரியும் என்று தெரியவில்லை. குறைந்த பட்சம் அதைக்குறித்து தெரிந்து கொள்வது நல்லதில்லையா!. இது குறித்து எனக்கும் நேற்றுவரை தெரிந்திருக்கவில்லை. வலைச்சரத்தில் எழுதிவரும் பிரியமுடன் பிரபுவுக்குத்தான் நன்றி சொல்ல வேண்டும். நன்றி நண்பா!.
இந்த தினம் குறித்த மேலதிக விளம்பரங்களுக்கு http://ta.wikipedia.org/wiki/%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%95_%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D
அடத் தமிழிலேயே விக்கியில்! இதுகுறித்து பதிந்த அந்த தமிழருக்கு நன்றிகள்..
****************
அடச்சே! தமிழரின் மானத்தையே வாங்கிவிட்டார்கள். தமிழனுக்கு இப்படி ஒரு கொடுமை நேருவது இதுவே முதல் முறை. என்ன கொடுமை இது. நகத்தைக்கடித்துக் கொண்டு நேற்று டிவியை பார்த்து அப்படியே ஷாக்காய்ட்டேன்.
ஹைடன் என்ன அடி அடித்தார். அவர் அடித்த அடிக்கு எத்தனை சுலபமாய் வெற்றி பெற்றிருக்கலாம். சேசே தமிழன் மானம் சந்தி சிரிக்கிறது. இவர்களெல்லாம் தமிழர்களா.. கொஞ்சமாவது அக்கறை இருக்கிறதா.. பொறுப்பு இருக்கிறதா..
டெல்லி ஒரு மொக்கை அணி. முழு பலம் வாய்ந்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைவர் கொஞ்சம் கூட பொறுப்பில்லாமால் தமிழரின் மானம் பறிபோகிறதே என்கிற அக்கறை சிறிதும் இன்றி ஆடினர். அதிலும் மிக எளிதாக நாம் ஜெயித்துவிடவேண்டிய ஒரு மேட்சை தனது அக்கறையில்லாத ஆட்டத்தால் தோற்றுப்போனது கண்டு மனம் வெதும்பினேன். அதையே மதுரையே சேர்ந்த ஒரு இளைஞரும் மைதானத்தில் கூறினார். நன்றி செட் மாக்ஸ்.
பார்க்கும் போது மனம் வெடித்தது. இதயம் பொங்கியது. கையிலிருக்கும் ரிமோட்டை உடைத்து விடலாம் என்று கூடத்தோன்றியது. என்ன செய்ய என் வீட்டு பிளாக் அண்ட் வொயிட் சாலிடேர் டிவிக்கு ரிமோட் கிடையாது. தீக்குளித்துவிடலாம் என்று கூடத் தோன்றியது. மண்ணென்ய் தீர்ந்துவிட்டது. அடுத்த மாதம்தான் கிடைக்குமாம். அதற்குள் இன்னும் தமிழன் மானத்தை எப்படியெல்லாம் வாங்கப்போகிறார்களோ..
அதனால் மனம் நொந்து வெந்து வெதும்பி ஒன்றும் செய்யாமல் தமிழரின் நிலைகண்டு அழுது புரண்டு கேடிவியில் போட்ட அண்ணாச்சி நடித்த ( திருமங்கலம் தேர்தல் புகழ் ) ஐயா படம் பார்த்து 9 மணிக்கே தூங்கி போனேன். நாளைக்கு டெல்லியில் இருந்து எனது மூத்த அதிகாரி (இந்திக்காரர் ) வருகிறார். என்னைத்தான் கடலில் தூக்கியெறிந்தாலும் கட்டுமரமாக மிதக்க வேண்டுமே.. விடியட்டும் பார்த்துக்கொள்வோம். இன்னும் பல ஆட்டங்கள் தமிழனுக்கு இருக்கிறது. நெக்ஸ்ட் மீட் பண்றேன்.
********
அவன் பெயர் டக்ளஸ். எப்போதும் என்னை நெக்ஸ்ட் மீட் பண்ண துடிக்கும் துடிப்பான இளைஞன். எதையும் ஆராய்ச்சிப் பண்ணும் குறுகுறுப்பு. எது சொன்னாலும் ஏன் என்று கேட்கும் எனக்கு பிடித்த பதிவன். அவன் இவனென்று அவரை மரியாதையின்றி விளிப்பதை அவன் ஏற்றுக்கொள்வான் என்றே நினைக்கிறேன்.
நேற்று சாட்டில் பேசும் போது ஏன் இப்போதெல்லாம் எதிர்வீட்டு ஜன்னல் எழுதுவதில்லை என்றான். பதிவெழுத மேட்டரே இல்லையென்றால்தான் எ.வீ.ஜ எழுதுவேன் என்றேன். அவ்வளவு ஈஸியா அது என்றான். வேண்டுமானால் நீ ஒரு தலைப்பு கொடு அதை வைத்து எழுதித் தருகிறேன் என்றேன்.
இதோ இந்த பதிவு. போதுமா நண்பா ராம்ராஜ் என்கிற எனக்கு பிடித்த என் டக்ளஸ் தம்பி.
****************
அப்படியே அகில உலகத்திலும் சந்திரமண்டலத்திலும் இருக்கும் பல ஆயிரம் கோடி மக்களும் மக்களும் முப்பது முக்கோடி தேவர்களும் நாப்பது நாற்கோடி அசுரர்களும் மும்மூர்த்திகளும்
நம் வலைப்பதிவை படிக்கும் ஆறு கோடி தமிழ்மக்களும்
திருச்சியில் போட்டியிடும் எங்கள் அன்பு அண்ணன் மன்சூர் அலிகான் அவர்களுக்கும் , ராமநாதபுரம் தொகுதியில் போட்டியிடும் அண்ணன் வலையுலக புகழ் எட்டாவது வள்ளல் ஜே.கே.ஆர் அவர்களுக்கும் , வருங்காலத்தில் அமெரிக்க ஜனாதிபதி ஆக இருக்கும் அண்ணன் அழகிரி அவர்களுக்கும் உங்கள் பொன்னான வாக்குகளை போட்டு வெற்றிபெற செய்யுமாரு காலில் விழுந்து கதறி அழுது கேட்டுக்கொள்கிறேன். ( யோவ் நீங்க குடுத்த அறுபத்தியஞ்சு ரூவாவுக்கு இவ்ளோதான் கூவ முடியும்... இலவசமாய் கூவ பதிவுலகில் பல கோயிஞ்சாமிகள் இருக்கிறார்கள் அவர்களை அணுகவும்.)
*************
மேலே எழுதியிருந்த மொத்தத்தையும் படித்திருந்தால். மன்னிக்கவும் இன்னும் நான்கு நாட்களுக்கு நம் வலைப்பூ விடுமுறை. அதனால் நான்கு நாட்களுக்கும் சேர்த்து ஒரே பதிவாக...
நேரடியாக கடைசி வரிக்கு வந்திருந்தால் இந்த பதிவையே நாள்தோறும் தினமும் ஒரு பாரா என்று படித்து அறிவை வளர்த்து வைகுண்டத்திற்கு செல்லலாம்.
நெக்ஸ்ட் மீட் பண்றேன்...
இன்று பந்த் - வெற்றி! வெற்றி! வெற்றி!
வெற்றி வெற்றி வெற்றி
ஆட்டோக்கள் ஓடவில்லை
பஸ்கள் வரவேயில்லை
இயல்பு வாழ்க்கை பாதிப்பு
தலைவா உன் பந்த் அபார வெற்றி
சன்டிவியில் திருடாதிருடி
கலைஞரில் முரட்டுக்காளை
ஆதித்யாவில் இடைவிடாத சிரிப்பு
சிரிப்பொலியின் நகைப்போ இன்னும் அடங்கவில்லை
தங்கைக்கு குழப்பம் ரஜினியா தனுசா
பக்கத்துவீட்டு அக்காவுக்கு புதுப்படம் டிவிடி
அதிலும் குழப்பம்
ஆங்கிலமா தமிழா!
அம்மாவுக்கோ குழப்பம் குழம்பு வைப்பதில்
இன்றைக்கு மட்டனா சிக்கனா மீனா? - அப்பாவுக்கு
இன்னும் தெரியவில்லை மதியம் கலைஞரில் என்ன படமென்று
புதுப்படமா பழைய படமா? - எனக்கோ
மதியம் உறங்கலாமா அல்லது புதுப்பதிவா?
ஆயிரம் குழப்பங்கள் அத்தியாவசிய குழப்பங்கள் - ஆனாலும்
மனது நிறைந்து மகிழ்ச்சியாய் இருக்கிறது
ஈழத்தமிழா உன்னால்தான் இன்று இது...
தமிழகமே நன்றி சொல்லும் உன் சாவுக்கு
சாவு சாவு மேலும் சாவு
ஐ பி எல் ஆட்டம் தொடங்கிவிடும்
அது வரைக்கும் சாவு
ஆட்டம் முடிந்ததும் சந்திப்போம்
பந்த் நடத்திவிட்டோம் வெற்றிகரமாய்
இனி உனக்கும் மகிழ்ச்சிதான்
கடைசியாய் ஒன்று
தமிழினத்தலைவர் கலைஞருக்கு
விஷ் யூ ஏ வெரி ஹேப்பி பந்த் டே
***************************
21 April 2009
சரத்பாபு என்றொரு கைப்புள்ள!
சரத்பாபு என்கிற பெயர் போன வாரம் வரைக்கு அத்தனை சுவாரஸ்யமாய் இருந்ததில்லை. நமக்கு தெரிந்த சரத்பாபு எப்போதும் ரஜினிக்கு நண்பனாய் நிறைய படங்களில் வருவார். வெள்ளைவெளேர் என பெட்ரமாக்ஸ் லைட்டின் மேன்டில் போல பளீர் என இருப்பார். எப்போதும் ரஜினிக்கு துரோகம் செய்து கிளைமாக்ஸில் திருந்தி தோஸ்த்தாகி விடுவார். போன வாரமென்று நினைக்கிறேன். தமிழ்மணத்தை மேயும் போது சரத்பாபு தென்சென்னையில் போட்டி என்கிற வாசகங்கள் கண்ணில் பட்டது. அட முத்து புகழ் சரத்பாபு சென்னையில் நிற்கிறாரா என வாயை பப்பராப்பா என பிழந்து கொண்டு கிளிக்கி படித்தேன். பிறகுதான் தெரிந்தது இந்த சரத்பாபு வேறு ஆள் என்று.
ஆனாலும் ஏனோ அந்த பதிவு அத்தனை சுவாரஸ்யமாய் இல்லை. லூசில் விட்டுவிட்டேன். சில நாட்களுக்குள் ஆளாளுக்கு சரத்பாபு ஒரு மகான், அவர் ஒரு சிகப்பு மனிதன், அவர் ஒரு எந்திரன் என்கிற ரேஞ்சில் பதிவுகள் போட்டு வந்ததை காணநேர்ந்தது. யாருப்பா இந்த சரத்பாபு தமிழ்நாட்டில் இருக்கும் நாற்பது தொகுதிகளில் ஒரே ஒரு தொகுதியில் போட்டியிடும் ஒரு தனி நபர். எந்த கட்சியும் சாராதவர் அல்லது சுயேட்சை. ஐஐஎம்மில் படித்து எம்பிஏ பட்டம் பெற்றவர். குடிசையில் வாழ்கிறவர். இந்தியாவை முன்னேற்ற! பல திட்டங்கள் வைத்திருக்கிறவர். ஆயுத எழுத்து சூர்யாவைப்போல அதிரடியாய் களம் இறங்கியிருக்கிறார்.
ஒருவன் ஏழ்மையில் படித்துவிட்டாதாலும் , சுயமாக தொழில் செய்து முன்னேறிவிட்டதாலுமே அவர் அரசியலுக்கு தகுதியானவர் என்று சொல்வது எத்தனை அபத்தம். பத்தாம் வகுப்பு படித்த ஒரு மிடில்கிளாஸ் இளைஞர் , பல வருடமாய் அரசியலிலும் நாட்டின் முன்னேற்றத்திலும் அக்கறையுள்ள எங்கோ குமாஸ்தாவாய் பணிபுரிகின்ற ஒருவர் இது போல போட்டியிட்டால் நம்மில் எத்தனை இளைஞர்கள் அவருக்கு ஆதரவுக்கரம் நீட்டுவோம்.
கட்சி சார்பு அரசியலுக்கும் இந்த ஐஐடி ஐஐஎம் இளைஞர்களின் அரசியலுக்கும் பெரிய வித்தியாசம் இருப்பதாய் தெரியவில்லை. நான் ஐஐடியில் படித்துவிட்டேன் , எனக்கு நிறைய ஆளுமைத்திறன் இருக்கிறது , இட்லிக்கடை வைத்து பலருக்கு வேலை தந்திருக்கிறேன் , நான் எம்பியானால் ஊரையே மாற்றுவேன் என்பது வெறும் விளம்பரமாகவே தெரிகிறது. இதையெல்லாம் புதிய கீதை என்கிற படத்தில் ஏற்கனேவே தேவையான அளவு அலசிவிட்டார்கள்.
இதோ இவருக்கான ஆதரவைத்தருகின்ற படித்தவர்கள் முன்வைக்கும் காரணம் என்ன ? படித்தவர் , பத்தாம்வகுப்பு வரை படிப்பது ஒரு படிப்பு கிடையாதா? . அப்படியானால் குறைந்த அளவு படித்த இளைஞர்கள்? அவர்களுக்கு சமூகப்பார்வை கிடையாதா ஆளுமைத்திறன் கிடையாதா.. தன் இளைமையில் கஷ்டப்பட்டு படித்துவிட்டதால் மட்டுமே ஒருவர் அரசியலுக்கு தகுதியானவர் என்று எதைக்கொண்டு இந்த படித்த மூளையுள்ளவர்கள் நினைக்கிறார்கள் என்பதற்கான காரணம் புரியவில்லை. எந்த ஒரு அரசியல் பார்வையுமின்றி நடைமுறை சிக்கல்கள் குறித்து சற்றும் கவலையின்றி தான் படித்துவிட்டோம் என்கிற ஒரே தகுதியோடு முன்னிற்கிறார் இந்த இளைஞர்.
அதே தொகுதியில் இன்னும் சிலபல சுயேட்சை வேட்பாளர்களும் நிற்கக்கூடும். அவர்கள் குறித்து யாருக்கும் அதிகம் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. ஒரு படித்தவர் அரசியலுக்கு வருவது இதுதான் முதல் முறை என்பதைப்போல ஒரு மாயையான பிம்பம் இங்கே உருவாக்கப்படுகிறது. சரத்பாபு என்கிற ஒரு படித்த இளைஞர் நேரடியாக அரசியலில் ஈடுபடுவது நிச்சயம் பாரட்டப்பட வேண்டிய ஒன்றுதான். பாராட்டுவோம் அவருக்கான நம் ஆதரவையும் தெரிவிப்போம். அதே வேளையில் பாராளுமன்றத்தேர்தல் குறித்து அறிந்து கொண்டு அவர் போட்டியிட்டிருக்கலாம். தென்சென்னைத்தொகுதி தமிழகத்தின் மிகப்பெரிய தொகுதிகளில் ஒன்று. விருகம்பாக்கம்,சைதாப்பேட்டை,வேளச்சேரி,மடிப்பாக்கம், (இன்னும் நிறைய இருக்கிறது.. ) முதலான பல ஊர்களை உள்ளடக்கியது. இத்தனை ஊர்களைக் கொண்ட தொகுதியில் போட்டியிட்டு சில ஆயிரம் ஓட்டுக்களை மட்டும் பெற்று தோற்றுப்போவதைக்காட்டிலும் தனது சொந்த ஊரில் தனது ஏரியாவில் உள்ளாட்சி தேர்தல் நடைபெறுகையில் கவுன்சிலர் தேர்தலில் சுயேட்சையாக போட்டியிட்டு அந்த சில ஆயிரம் வாக்குகளை வைத்தே வெற்றிப்பெறலாமே. ஆளம் பார்த்து காலைவிடு என ஐந்தாம் வகுப்பிலேயே போதிக்கப்பட்டிருக்கிறது. ஐஐஎம்மிலும் கட்டாயம் கற்றுத்தரப்பட்டிருக்கும்.
ஒரு படித்தவர். பண்புள்ளவர். துடிப்பான இளைஞர். தன்னை அரசியலில் முன்னிறுத்தும் துடிப்புள்ளவர். ஏன் அரசியலையும் அதன் கட்டமைப்பையும் புரிந்து கொள்ளாமல் தான் தோற்றுப் போவது உறுதி (அவர் வெற்றி பெற 1 சதவீதம் கூட வாய்ப்பிலாதபோது) எனத்தெரிந்தும் , குருட்டுநம்பிக்கையில் வருத்தப்படாத வாலிபர் சங்கத்தலைவர் வடிவேலுவைப்போல , நான்கு பேர் ஏற்றிவிட்டதால் துடிப்பாய் அரசியல் கட்டதுரைகளிடம், ஏன் வீணாக தன் நேரத்தையும் பணத்தையும் செலவிட்டு அடிவாங்க ஆசைப்படுகிறார் என்பது புரியாத புதிர்.
அவரது தன்னம்பிக்கையையும் முடிவையும் பாராட்டத்தான் வேண்டும். ஆனால் தனது உழைப்பையும் அறிவையும் கொஞ்சம் பொறுத்திருந்து உள்ளாட்சித்தேர்தலில் போட்டியிட்டு நிரூபித்திருக்கலாம்.
காதல் திரைப்படத்தில் ஒரு பிரபலமான காட்சி உண்டு. சினிமாவிற்கு தகுதியில்லாத முக அமைப்புடையவர் என்கிற சினிமா அளவீட்டின்படியான ஒருவர் தான் நடித்தால் ஹீரோவாகத்தான் நடிப்பேன் , அண்ணன் தம்பி அமெரிக்க மாப்பிள்ளைகளாகவெல்லாம் முடியாது என்பார். அதைப்போலத்தான் இருக்கிறது சரத்பாபுவின் செயலும்.
இது போன்ற இளைஞர்கள் தங்களது செல்வாக்கையும் அறிவையும் முயற்சியையும் ஆக்கப்பூர்வமான விடயங்களில் ( வெற்றிபெறக்கூடிய) ஈடுபட்டு இந்தியாவை முன்னேற்றலாம். நூறு சதவீதம் தோற்றுப்போகக்கூடிய விடயத்தில் ஈடுபட்டு பின் தோற்றும் போய் சமூகத்தின் மீது காழ்ப்புணர்ச்சிகொண்டு என்னை இந்த மடசமுதாயம் ஏற்கவில்லை. என்னை தோற்கடித்துவிட்டது என்று புழுங்கி மண்ணாய் போவது எத்தனை மோசமான ஒன்று.
இதோ அந்த பாதையை நோக்கி இன்னும் ஒரு இளைஞன். அவனுக்கு பின்னால் நூற்றுக்கணக்காய் வழி தெரியாத ஆடுகளைப்போல மேலும் பல இளைஞர்கள். அரசியலில் வெற்றி பெறுவது அத்தனை எளிதானது அல்ல என்பதை ஏன் இவர்கள் புரிந்து கொள்வதில்லை என்கிற ஆதங்கமே என்னை இந்த பதிவை எழுதத்தூண்டியது. சரியான வழிகாட்டுதலின்றி அரசியலை தவறாய் புரிந்து கொண்டு தோற்றுப்போய் பின் வெக்ஸ் ஆகி பழைய வாழ்க்கைக்கே திரும்பிய ஆயிரணக்கணக்கான இளைஞர்களில் இன்னும் ஒருவன்.
அரசியலில் ஈடுபட முனையும் இளைஞர்கள் முதலில் அது குறித்து அறிந்து கொள்ளலாம். இங்கே வெற்றி பெறத் தேவையானவைகளை தேர்ந்தெடுத்து உங்கள் கோடாரிகளை கூர்த்தீட்டிக்கொள்ளலாம். எம்பிஏ படித்த இளைஞருக்கு சொல்லித் தரவேண்டியதில்லை எந்த ஒரு செயலையும் முன்னதாகவே சரியாக திட்டமிட்டு செய்யவேண்டுமென்று.. அதை வடிவேலுவே சொல்லித்தந்திருக்கிறார் எதுவா இருந்தாலும் பிளான் பண்ணி பண்ணனும் என்று.
ஏத்திவிட்டு ஏத்திவிட்டே உடம்ப ரணகளம் ஆக்குறதே இந்த பயலுகளுக்கு வேலையா போச்சு.. என்பதாகத்தான் இருக்கிறது சரத்பாபுவின் மீதான இளைஞர்களின் ஆதரவும்.
17 April 2009
உடல்கள் விற்பனைக்கு...
13 April 2009
குவாட்டருக்கு தி.மு.க சைட் டிஷ்க்கு தே.மு.தி.க!
09 April 2009
சும்மா டைம் பாஸ் மச்சி!!
07 April 2009
சாலமன் (என்கிற) சாமானுக்கு கடிதம்!
இன்னாடா இவன் த்தா சாமான்றானேனு திங்கிங்கா! த்தா மூச்சுக்கு முன்னூறுவாட்டி ங்கோத்தா போட்டு பேசியே பயக்கப்பட்ட உன்னான்டா அப்பிடி பேஸ்னாதானே மாமா என்னிய அடியாளம் தெர்யும்.
த்தா நானும் ஒன்னோட அதே டிரெயின்ல ஏறிருந்தா நானும் ஒன்னாட்டம் காணாம பூட்டுருப்பேனே இன்னாவோ.. அல்லாங்காட்டி இன்னிக்கு இப்படி இந்துருப்பனானும் தெர்ல மாமா.. த்தா அது இன்னா டிரெயினுனு கூட ரொசனை இல்ல மாமா!
டிரெயினுனு சொல்லதான் ஞாபகம் வர்து, ஒருவாட்டி லோக்கல் டிரெயின்ல, போத சிரிஞ்சி வாங்க பைசா இல்லாத பிச்ச எடுத்துனுருந்தமே ஞாபகம்க்கீதா! அப்ப பிடில் வாசிச்சிகினு நம்மளான்டயே பிச்ச எட்த்த குருடன நாயடி பேயடி அட்ச்சியே .... நாம புச்சா பிச்ச எடுக்கறோம்னு பழய பிச்சக்காரன்லாம் சேந்துகினு நம்ம டவுசர கயட்டி ஓட வுட்டானுங்களே ஞாபகம்கீதே... இன்னா அடி மாமா அது.. எச்சத்தட்டுல அடிவாங்கினாலும் செம அடி மாமா.. பிச்ச எட்த்து துன்னாலும் நல்லா உடம்ப வள்த்து வச்சிகிறானுங்கோனு நீ சொன்னியே.. சோக்கா மர்ந்துருவனா மாமா!
டவுசருனுதம்தான் ஞாபகம் வர்து.. துரைசாமி பிரிஜ்ஜோரம் மங்காயாண்ட அதான் மாமா மப்பு மங்கம்மா.. கோட்டர்க்கே...___ காட்டுவாளே , 30ரூவா ரேட்டு பேசி மேட்லி பிரிஜ்ஜாண்ட ஒதுக்குப்புறமா ரெண்டுபேரும் ஒதுங்க சொல்ல ஏதோ ஒன்னு உன் அதுல கடிச்சிருச்சுனு டவுசரக்கூட மாட்டமா ஓடியாந்தியே.. நான் கூட போலீஸ் தொர்த்துதுனு ஓடனேனே... மாமா அசால்ட்டா வுட்ற முடிமா!
மாம்பலம் ஐயரான்ட ஒருவாட்டி அசால்ட்டு பண்ணியே மாமா!
ஒன்ன சாலமா சாலமா னு கூப்பிட புடிக்காத சாமா சாமா னு கூப்ட்டுகினு இருக்க சொல்ல ஏரியாவாண்ட அல்லாரும் ஒன்ன ஐயருனு நினைச்சிகினு.. ஒரு குடுமி ஒன்னான்ட வந்து ஒரு நா.... ''ஐயரா இருந்துண்டு இப்படி இருக்கியே சண்டாளா நன்னா இருப்பியா'' னு ஒன்னான்ட டகில் வுட நீ அவன நடு ரோட்ல வுட்டு வூடு கட்டி பொயந்தியே.. அப்பால சாமா வே சாமான் ஆகி ஏரிய பூரா சாமான் வூடு சாமான் வண்டி சாமான் ஆட்டோனு அல்லா சாமானும் ஒனக்கு சாமான் சாமான் ஆச்சே ஞாபகம் கீதா..
மாமா நம்ம கீதா ஞாபகங்கீதா.. இன்னா மாமா நீ எப்படி மறப்ப.. மாம்பலம் ஹைரோடான்ட கணபதி பிளாட்ஸ்ல தொழில் பண்ணிகினு இருக்க சொல்ல ஒனக்கொண்டி ஃப்ரீயா போய் வருவீயே.. அதுகூட ஒன் மேல லவ்வு லவ்வுனு சொல்லிகினு என்னான்ட கூட ஃப்ரீயா வருமே.. அத போலீஸ் இட்டிகினுப் பூட்டானுங்கோ மாமா.. அப்பால அது திரும்பி வர சொல்ல கந்தலாயி மூஞ்செல்லாம் கீய்ஞ்சி போய் கேவ்லாமாகி என்னான்ட வந்து பாக்கு வாங்க பத்து ரூவா கேட்டு பிச்ச எடுத்துகினுருந்துச்சு..
மாமா ஒன்ன கட்சியா தாம்பரம் பக்கம் அம்பிகாவோட பாத்தேனு நம்ம ஏழுமல அதான்பா நம்ம பஞ்சர்கட ஏழுமல, ரெண்டு வர்ஷம் முன்னால சொன்னான். இன்னா மாமா என் லவ்வர காணலனு நானும் அஞ்சு வர்ஷமா தேடினு இக்கிறேன். நீ அலேக்கா தூக்கிக்கினு எஸ்ஸாய்ட்டீயே.. எங்கிருந்தாலும் வாய்க மாமா வாய்க.. புள்ளக்குட்டிலாம் பெத்துகினுருப்பே இந்நேரம்.. த்தா.. எத்தினி வாட்டி அவள .. விடு மாமா.. பயசெல்லாம் சொன்னா உன் லைப்பு வீணாப்பூடும்..
என்னை முத்தய்யாவாக ( முத்தய்யாவா முத்தைய்யாவா என்ன பேரோ ) அருமை அண்ணன் சாலமனுக்கு (யார் பெத்த புள்ளையோ!) கடிதமெழுத அழைத்த பதிவுலக ரித்திஷ் திமுகவின் பிரச்சார பீரங்கி நண்பர் லக்கிலுக்குவிற்கே இந்தப்பதிவு சமர்ப்பணம். மாதவராஜ் அண்ணன் என்ன நினைத்துக்கொண்டு இந்த தொடர் விளையாட்டை ஆரம்பித்தாரோ தெரியவில்லை அது அங்கே சுற்றி இங்கே சுற்றி என்னிடம் வந்துவிட்டது.
06 April 2009
அழகிரியும் ஜே.கே.ரித்தீஷும் எனக்கு வராத லெக்பீஸும்
கலைஞர் இன்னும் பல்லாண்டுகள் ஆட்சி செய்து தமிழ் வளர்க்கட்டும். இளைஞரணி தலைவராகவே ஸ்டாலின் இன்னும் நூறாண்டுகள் பதவி வகிக்கட்டும்.
மாமன்னர் கலைஞர் வாழ்க - அவர்தம் குடும்பம் வாழ்க - உன் குடும்பம் உனக்கெதற்கு - திமுக என்னும் அருமையான கழகமிருக்க.. வா என் கண்மணியே தேர்தல் பணியாற்ற வா.. கொடியவரை வீழ்த்துவோம் வா..
03 April 2009
அருந்ததீ. - அசத்தீட்ட பொம்மாயி!
02 April 2009
எ.வீ.ஜ-5 - பாலபாரதியும்,பதிவர் சந்திப்பும்,பின்ன ஞானும்..!
எதிர்வீட்டு ஜன்னல்கள் - 5
பிப்ரவரி 2008
பாருங்கடா பதிவு எழுதுகிறேன் என ஒரு அடப்பாசு பிளாகை துவங்கிய நேரம் அது. இன்றும் அது அடப்பாசாகத்தான் இருக்கிறது. ஓரளவு பாசாகும் தகுதியோடிருந்தாலும். அவனைத்தவிர யாருமே படித்திராத பதிவுகள் நிரம்பிய பிளாக் அது. பின்னூட்டங்கள் கூட ஒன்று விட்ட அண்ணனுக்கு போன் போட்டு போட சொன்னது. அவரும் ஒன்று போட்டார். அச்சமயத்தில் ஒரு பதிவர் சந்திப்பு ஏற்பாடு செய்திருந்தார் அந்த வலையுலக தல.
அவனும் கலந்துகொண்டான் அனைவரும் அன்போடு பேசினர். கூச்ச சுபாவம் அதிகம் கொண்டிருந்தவன் யாருடனும் பேசவில்லை.சந்திப்பு முடிந்து திரும்பியவன் மீண்டும் வெகுண்டெழுந்து எழுதத்துவங்கினான். மீண்டும் அதே நிலைதான். படிக்க ஆளில்லை. நமக்குநாமே என்கிற நிலைதான். அவனே வேறு வேறு பெயர்களில் அவனுக்கே பின்னூட்டங்கள் போட்டுக்கொண்டான். பின்னூட்ட டுபுரித்தனங்கள் அவனுக்கு கை வந்தன. இங்கே தனிமையாய் உணர்ந்தான். மீண்டும் எழுதுவதில் சுணக்கம். எழுதுவதே இல்லை.
ஏப்ரல் - 2008
ஒரு ஞாயிறு மதியம். துணிதுவைத்துக்கொண்டிருந்தான். அன்றைக்கு பதிவர் சந்திப்பு ஏற்பாடாகியிருந்தது. இவனுக்கு அங்கே செல்ல ஏனோ மனதில்லை. பதிவு எழுதவே பிடிக்காதவனுக்கு பதிவர் சந்திப்பு எதற்கு. யாருமே படித்திராத பதிவராய் தன்னை உணர்ந்து கொண்டு விலகி நின்றான். இனி எழுதவே போவதில்லை. எழுதி என்னத்தை கிழித்து விட்டோம் என விரக்தியுற்று அதை மறந்து தொலைத்து கிழித்து விட்டான். துணியை துவைத்தபடி. நான் போகாவிட்டால் யாருக்கு என்ன நஷ்டம்,யார் கவலைப்படப் போகிறார்கள். ஆனாலும் மனதிற்குள் ஒரு வேதனை.
ஒரு அலைபேசி அழைப்பு , எதிர்புறம் அந்த பதிவர் என்னடா தம்பி சந்திப்புக்கு வரலையா என உரிமையோடு ஒரு கேள்வி. துணிதுவைத்ததில் உடலெங்கும் நனைந்திருந்தது கண்களைத்தவிர . இப்போது அதுவும் சேர்த்து. இவனால் பதில் கூற முடியவில்லை. உடனே கிளம்பி வாடா என் டுபுக்கு என அழைக்கிறார். படபட சடசடவென உடையை மாற்றிக்கொண்டு கிளம்பினான். அண்ணா எப்படினா பதிவு எழுதறீங்க எப்படி உங்களுக்கு நேரம் கிடைக்குது, என் பதிவ யாருமே படிக்க மாட்டேன்றாய்ங்க எதுக்கு நான் எழுதணும் எழுதவும் வரமாட்டேங்குது இதையே பல பதிவர்களிடமும் கேட்டான்.
சந்திப்பு முடிந்தது. எழுதத்துவங்கினான். எதையாவது எழுதுடா என அந்த அண்ணன் விதைத்த நம்பிக்கை மனதில் ஒளிர எதையாவது எழுதத் துவங்கினான்.
ஜனவரி 2009
இதோ இப்போதும் எழுதிக்கொண்டே இருக்கிறான். 2 லட்சம் பேர் பார்த்துவிட்டார்கள் அவன் வலைப்பூவை. குமுதம் தனது டாப் டென்னில் ஏழாம் இடம் கொடுத்தது.
இன்று
மண்ணாய் போயிருக்க வேண்டிய அவனை மரமாய் வளர விதை போட்டவர் அந்தப் பதிவர். அவர் மட்டும் இல்லாவிடில் அவன் வாழ்க்கையில் வலையுலக எழுத்தென்பது கமா இல்லாமல் முற்றுப்புள்ளியாய் முடிந்திருக்கும் .
அந்த பதிவர் , பாலபாரதி என பலராலும் அறியப்பட்ட அவனது பாலாண்ணா!
இதோ ஒரு வருடத்தை நிறைவு செய்கிறான் அவன் தனது வலையுலக பயணத்தில். அவன் தன் செல்ல பாலாண்ணாவுக்கே முதல் நன்றியை தெரிவிக்க ஆசைப்படுகிறான். நன்றி என ஒரே வார்த்தையில் முடித்துவிட முடியவில்லை. இதுவரை தனக்கு வந்த பாராட்டுக்கள் அனைத்தையும் அவருக்கே தர எண்ணுகிறான். அது அவருக்கே உரியதாம். அதில் யாருக்கும் பங்கில்லை என்கிறான். பாசக்கார பயபுள்ள..
2006 ஆம் ஆண்டு அது, பதிவுலகில் பாலபாரதி என்பவரின் வரவு பலருக்கும் பிற்காலத்தில் சிம்மசொப்பனமாக இருக்க போகிறது என்பது அப்போது யாருக்கும் தெரியாது. ஒரு குழு மட்டுமே கொட்டமடித்துக்கொண்டிருந்த வலையுலகில் அவர்களை எதிர்த்து , அவர்களை எதிர்ப்பவர்களை ஒருங்கிணைத்து சிலரது ஆதிக்கத்தில் இருந்த பதிவுலகை அனைவருக்குமாய் ஆக்கிய பெருமை பாலபாரதிக்கே உரியது. பதிவர் சந்திப்புக்கள் பலதையும் பதிவர் பட்டறைகளும் நடத்தி பதிவுலகின் வளர்ச்சிக்கு மிக முக்கிய பங்காற்றியவர் அவர்.
அவரது வலைத்தள முகவரி - http://blog.balabharathi.net
********************************************
பதிவருங்களுக்கு ஒரு கடிதாசு;
அன்புள்ள மாம்ஸ் அண்டு மச்சிஸ்!
எப்படிக்கீறீங்கோ..
புச்சு புச்சா நெரிய பதிவருங்கோ எழுதுறாங்கோ.. அதிலயும் நெரிய பேரு சோக்கா எழுதுறாங்கபா.. நம்ம பதிவுலக பெர்சுங்கோ அவங்களலாம் நேர்ல பாக்கணும்னும் அவங்களோட மீட் பண்ணிக்கனும்னும் முடிவு பண்ணிக்கீதுங்கோ... அதுமில்லாம புச்சா வந்த பதிவருங்களும் ஒருத்தர ஒருத்தர் மீட் பண்ணிக்கினு கும்சா இருக்க ஒரு வழியா இது இருக்கும்னு தேனாம்பேட்டை ரைட் ரங்கம்மா நினிக்கிது..
அதனால் மக்கள்ஸ் பகீர்னு இந்த வீக்கு ஒரு பதிவர் சந்திப்பு வைக்கலாம்னு பெருங்குடிமக்கள்லாம் முடிவு பண்ணீர்ச்சுங்கோ..
அதனால இன்னானா...
வலையுலக பெரிசு பாலபாரதி அவர்களின் தலைமைல
வர ஏப்ரல் மாசம் 5 ஆம் தேதி சாயங்காலம் நம்ம சென்னைலக்கீற நம்ம மெரீனா பீச்சாண்டக்கீற நம்ம காந்தி செலையாண்டக்கீற தண்ணில்லாத குட்டயாண்ட அல்லாருமா சேந்துக்கீனு கடலை வாங்கி தின்னுகினு கும்சா குந்திக்கினு குஜாலா கும்மி அடிக்கலாம்னு முடிவு பண்ணிக்கீறோம். அல்லாரும் வந்து சேருங்கோ மக்கள்ஸ்...
இன்னார்தான் கலந்துக்கணும், இன்னார்லாம் கயந்துக்க கூடாதுனு ஒன்னியும் ரூல்ஸ் கடியாதுபா! நீங்கோ பதிவு எழுதுங்கோ எழுதாதீங்கோ படிங்கோ படிக்காதீங்கோ யாரையாவது அடிங்கோ அடிக்காதீங்கோ ஆனா பதிவர் சந்திப்புக்கு வந்துருங்கோ...!
இத்தான் பேசணும் இதெல்லாம் பேசப்பிடாதுனு ஒரு ரூல்ஸ் கீல்ஸ்லாம் கடியாது.. யார் வேணா பேசலாம் இன்னா வேணா பேசலாம்..
இந்த பதிவர் சந்திப்பு யாரும் சேர்ந்துகிணு கூட்டம் போட்டுக்கிணு நட்த்துறதுலாம் கடியாது.. அல்லாருமா சேர்ந்துகிணு அல்லாருக்காவும் நட்த்துறது..
அல்லாரும் வந்து சேருங்கோ மக்களே...
எடம் - மெரீனா பீச்சு காந்தி செலையாண்டை
டைமு - 5 மணிலேருந்து அரட்ட கச்சேரி முடியற வரிக்கும்
நாளு - 05-04-2009 ஞாய்த்துகெழமை
மக்களே மறந்துடாதீங்கோ மறந்தும் வூட்ல தூங்கிடாதீங்கோ.. மருவாதியா வந்து சேருங்கோ அல்லாங்காட்டி பதிவு போட்டு உங்க நிஜார பேஜார் பண்ண வேண்டிருக்கும்..
எதினாச்சும் டவுட்டு இர்ந்த நம்பருக்கி போன் பண்ணுங்கோ.. ( சுண்டக்கஞ்சிக்கு ரிசர்வேஷன் இந்த நம்பர்ல கடியாது அதுக்கு வேற நம்பர் நேர்ல வாங்கோ வாங்கி தரேன்)
பாலபாரதி – 9940203132
லக்கிலுக் – 9841354308
அதிஷா – 9884881824
கேபிள் சங்கர் - 9840332666
முரளிகண்ணன் - 9444884964
அவ்ளோதான்மா கடுதாசி..
இப்படிக்கு உங்கள் அன்புள்ள
அதிஷா..
******************************
பதிவுலகில் ஒரு மாதமாவது தாக்கு பிடிப்பேனா என எண்ணியவன் ஒரு வருடத்தை கடக்கிறேன்...
என் பாதையில் எப்போதும் வழிகாட்டியாகவும் விழிகாட்டியாகவும் உறுதுணையாகவும் இருந்த இருக்கும் இருக்கவிருக்கும் முரளிக்கண்ணன்,பரிசல்,வடகரைவேலன்,வெயிலான்,ஜ்யோவ்ராம் சுந்தர்,வால்பையன், நர்சிம் ,கே.ரவிஷங்கர், உ.த அண்ணன்,கோவிண்ணா,செந்தழல்ரவி,பைத்தியக்காரன்,கேபிளார்,தாமிரா,ரமேஷ்வைத்யா அண்ணே,கார்க்கி,மருத்துவர் புருனோ,சஞ்சய் காந்தி,தூயா மிக முக்கியமாக நான் சந்தித்திராத என் நண்பர்கள் விக்கி என்கிற விக்னேஷ்வரன் மற்றும் மணிகண்டன், என்னை படித்த பிடித்த கடித்த கடிந்த பின்னூட்டமிட்ட பின்னூட்டமிடாத வாசகர் வாசகி என அனைவருக்கும் என் நன்றிகள் ஆயிரம் லட்சம் கோடி கோடி கோடி..நன்றிகள்
திரட்டிகள் இல்லாமல் நான் இல்லை என்பதில் உறுதியாய் இருக்கிறேன். என் பதிவுகள் திரட்டும் தமிழ்மணம்,தமிழிஷ்,தமிழ்வெளி,தமிழ்பிளாகட், திரட்டி.காம்,மாற்று, என அனைத்து திரட்டிகளுக்கும் நன்றிகள்.
*********************************