Pages

01 December 2008

எல்லாம் மாயா எல்லாம் ச்சாயா!




எல்லாம் மாயா எல்லாம் ச்சாயா :



ஒரு இளம் ஜென் மாணவன் , பல ஆசிரியர்களிடமும் சென்று பாடங்கள் கற்கிறான் , நிறைய கற்கிறான் . பின் இன்னும் கற்பதற்காக இவன் இதுவரை கற்ற ஆசிரியர்களின் குருவிடம் செல்கிறான் .



அவரிடம் சென்று தான் மேலும் ஞானம் பெற விரும்புவதாய் கூறுகிறான் , அவர் '' இது வரை என்ன கற்றாய் '' எனக் கேட்கிறார் ,



' நமது அறிவு , புத்தம் , ஜென் , என்று ஏதுமில்லை , இந்த உலகின் நியதி சூன்யமே , எல்லாமே சூன்யத்திலிருந்தே துவங்குகிறது ,சூன்யத்திலேயே முடிகிறது , இதில் உணர்தலோ புரிதலோ கொடுத்தலோ எடுத்தலோ ஏதுமில்லை ,

எதுவும் எங்கிருந்தும் வருவதுமில்லை , எதுவும் இங்கிருந்து செல்வதுமில்லை

எல்லாம் மாயா எல்லாம் சாயா''



குரு இதைக்கேட்டு அமைதியாய் ஒரு பீடியை புகைத்தபடி இருந்தார் . இவனோ அவரையே பார்த்துக்கொண்டு நிற்க எதிர்பாராமல் அவனது தலையில் தனது கைத்தடியால் 'நங்' என்று ஒரு அடி வைக்கிறார் . எதிர்பாராத அடியால் கடும் கோபமடைந்தான் இளைஞன் .

'' உலகில் எல்லாம் மாயையென்றால் இக்கோபம் எங்கிருந்து வந்தது ? '' என வினவினார்.

___________________________________________________________________

பேசாமல் கண்ணை மூடுங்கள் :

அந்த கோவிலின் பிராதான குரு இறந்து போகிறார் , அவரது ஆஸ்தான சீடன் மூன்று நாட்களுக்கு முன்னால் நோய்வாய்பட்டு படுக்கையில் கிடக்கும் அவரருகில் அமர்ந்திருக்கிறான் . அந்த சீடனை அவர் இறக்கும் முன் அவரது வாரிசாய் அறிவித்திருந்தார் .



''நீ, சிதிலமடைந்திருக்கும் அந்த கோவிலை கட்டிமுடித்தபின் என்ன செய்ய போகிறாய் ?'' குரு வினவுகிறார் .



''குருவே , நீங்கள் குணாமான பின் , அங்கே உங்களது சொற்பழிவுகள் இடம்பெறும் ''



''ஒரு வேளை நான் இறந்துவிட்டால் ''



''வேறு யாரையாவது வைத்து சொற்பொழிவாற்ற வேண்டியதுதான் ''



''யாரும் கிடைக்காவிட்டால் ''



''ஏன் லூசுத்தனமாய் இப்படி கேள்விகள் கேட்டு கொண்டிருக்கிறீர்கள் , பேசாமல் கண்ணை மூடுங்கள் '' என்று உரத்தக்குரலில் கத்தினான் .




*************************************************************************************
**
********
******
********
******
****
**
*