பீர் அருந்துதல் இன்று நம் நாட்டில் பரவலான ஒரு விடயம் . தமிழ்நாட்டில் டாஸ்மாக்குகளில் அதிகம் விற்கப்படும் பானமாக பீர் இருக்கிறது .பீர் அருந்துவோர் எண்ணிக்கையும் பீருக்கான சந்தையும் இந்தியாவில் நாளுக்குநாள் வளர்ந்து வரும் ஒன்று . நம் நாட்டில் அக்காலத்தில் பீர் இல்லையென்றாலும் சோமபானம் சுரா பானம் போன்ற வஸ்துக்கள் இருந்து வந்திருக்கிறது இவை பீரை போன்று இருந்திருக்கலாம்.
பிறகு வெள்ளையர்களின் ஆட்சியில் பீர் அருந்தும் பழக்கம் தொற்றியிர்ரருக்கூடும் , 70களில் பீர் தமிழ்நாட்டில் பெருவாரியாக நுழைந்திருக்கலாம் . இன்றும் புதிதாக மது அருந்த பழகுகிற ஒவ்வொரு குடிகாரனும் முதலில் தொடங்குவது பீரிலிருந்தே . இளைஞர்களை மட்டுமின்றி இளைஞிகளையும் வெகுவாக கவர்ந்து வரும் இப்பீரைப்பற்றி ஆயிரமாயிரம் கதைகளும் சிறுசிறு தகவல்களும் வியக்கவைக்கின்றன .
இன்று பப்களிலும் பார்களிலும் டாஸ்மாக்குகளிலும் பீர் மிக முக்கிய பங்கு வகுக்கிறது . பீர் குடிப்பதால் தொப்பை உண்டாகும் என்பது ஒரு தவறான கருத்தாகும் பீர் குடித்தபிறகும் குடிக்கையிலும் எடுத்துக்கொள்ளக்கூடிய உணவு மற்றும் நொறுக்குதீனிகளாலேயே அவை உண்டாகிறதென்றும்ம் குடித்தபின் கிடைக்கும் தூக்கமும் ஜீரணக்கோளாறுமே என ஆய்வுகள் கூறுகிறது . அது தவிர 3.5 சதவீதமே ஆல்கஹால் அடங்கிய பீர் குடிகாரர்களுக்கு ஒரு வரப்பிரசாதம் மட்டுமல்ல அளவோடு எடுத்துக்கொண்டால் உடலுக்கு நன்மை பயக்குமென மருத்துவ வல்லுனர்கள் கூறுகின்றனர்.
இனி பீர் குறித்த முதன்மை குறிப்புக்கள் :
*உலகின் முதல் சமையல் குறிப்பு பீருக்காகவே எழுதப்பட்டது .
*பீர் குறித்த சரியான ஆரம்ப காலத்திய வரலாறு என்று எதுவும் கிடையாது , ஆனால் 10000 ஆண்டுகளுக்கு முந்தைய மெசப்படோமிய நாகரீகத்திலேயே பீரைப்போன்ற ஒரு பானம் அருந்தப்பட்டதாக அகழ்வாராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
*சுமேரிய நாகரீகத்திலேயே முதன்முதலாக கோதுமையிலும் பார்லியிலும் செய்யப்பட்ட பீர்கள் கண்டறியப்பட்டுள்ளன . சுமேரியர்கள் கோதுமை மற்றும் பார்லியால் செய்யப்பட்ட 8 வகையான பீர்களை அருந்தியுள்ளனர். அதற்கு சாட்சியாக இன்றும் இங்கிலாந்து அருங்காட்சியகத்தில் பீர்தயாரிக்க பயன்படுத்திய வெசல்கள் இருப்பது குறிப்பிடத்தக்கது . இவர்களது எட்டு வகை பீர்களில் இன்றைய நாட்களில் இருப்பது போல STORNG , LAGER போன்ற வகைகள் இருந்தது ஆச்சர்யமூட்டுகிறது . இது தவிர இந்நாகரீகத்தில் அவர்களது பீரை தயாரிக்க பெண்களை மட்டுமே பயன்படுத்தியுள்ளனர். இதில் அவர்கள் மதச்சடங்குகளை செய்பவர்களாக இருந்தனர் என்பது மேலும் சுவாரசியம் . பீர்களில் சிலவகைகளை மட்டும் கடவுளுக்கு பிரசாதமாக வழங்கும் வழக்கமும் உண்டு . இன்று பீர் அருந்தும் அனைவரும் நிச்சயம் சுமேரியர்களுக்கு கடமை பட்டவராக இருக்க வேண்டும் .
*அக்கால எகிப்தியர்கள்கூட பீர்கள் பயன்படுத்தியதற்கான குறிப்புகள் அவர்களது பிரமிடுகளில் காணப்படுகிறது . ஆனால் நம்மைப்போலும் சுமேரியர்கள் போல் அல்லாமல் பீருடன் நீரை கலந்து அருந்தும் பழக்கம் கொண்டிருந்தனர்.
*பிற்காலத்தில் எகிப்தியர்கள் மூலமாக கிரேக்கர்களுக்கு இந்த பீர் தயாரிப்பு முறை சென்றிருக்கக்கூடும் என வரலாற்று ஆர்வலர்கள் கருதுகின்றனர். கிரேக்கத்தில் பீர் பயன்பாடு இருந்தாலும் அவர்கள் விரும்பி அருந்தியது வைனையே .
*4000 ஆண்டுகளுக்கு முன்னமே சீனர்களும் ''குய் ( KUI) " என்னும் பீர் அருந்தி வந்திருக்கின்றனர் .
*இது தவிர பாபிலோனிய நாகரீகத்திலும் பீர் பயன்பாடு அதிகமாக இருந்திருக்கிறது . பாபிலோனியர்கள் பல வகையான பீர்களை அருந்தியுள்ளனர் . இவர்கள் தனிதனியாக பீரை அருந்தாமல் பெரிய பாத்திரங்களில் பீரை ரொப்பி அதில் ஸ்ட்ரா போட்டு உறிஞ்சி குடிக்கும் விநோத பழக்கம் கொண்டிருந்தனர் . அதிலும் மன்னர் பரம்பரையாக இருந்தால் அவர்களுக்கு தங்க ஸ்ட்ரா..!
*பீர் தயாரிப்பில் RULE OF THUMB என்னும் ஒரு சொலவடை உண்டு , அக்காலத்தில் பீர் தயாரிப்பில் கொதிக்கும் நீரின் வெப்ப அளவை தங்களது கட்டைவிரலால் பார்க்கும் முறை இருந்தது , (அது தெர்மா மீட்டர்கள் இல்லாத காலம் ) ஏனென்றால் தண்ணீரில் ஈஸ்ட்களை கலக்கும் போது நீரின் வெப்பநிலை அதிகமாக இருந்தால் ஈஸ்ட்கள் இறந்து போக வாய்ப்புண்டு அதனால்தான் அக்காலத்தில் அப்படி ஒரு சொலவடை உருவானது .
*1977 ல் பீர் குடிப்பதில் 1.3 விநாடிகளில் 1 லிட்டர் பீரை குடித்ததே இதுவரை கின்னஸில் பதிவுசெய்யப்பட்ட ஒன்றாக இருக்கிறது .
* உலகிலேயே அதிக விலை கொண்ட பீர் " TUTENKHAMEN " என்கிற இங்கிலாந்து பீரே ஆகும்.. இது கேம்பிரிட்ஜ் யூனிவர்சிட்டியை சேர்ந்த சில மாணவர்களால் NEFERTITI என்னும் பேரழகியின் மம்மி குறித்த அகழ்வாராய்ச்சியின் போது கிடைத்த சில குறிப்புகளை கொண்டு, அக்கால எகிப்திய முறையில் உருவாக்கப்படும் ஒன்றாகும் . இதன் சமீபத்திய விலை ஒரு பாட்டிலுக்கு 52$கள்( ரூபாய். 2500) ஆகும் . இது மிககுறைந்த அளவே தயாரிக்கபடுவது.
*பெல்ஜியம் நாடு உலகிலேயே அதிக அளவு பீர் பிராண்டுகளை கொண்டுள்ளது . அந்த நாட்டில் மட்டுமே மொத்தம் 400 வகையான பீர்கள் விற்பனைக்கு உள்ளதாம்!
*பெல்ஜிய மதகுருக்கள் பீர்தயாரிப்பில் சிறந்தவர்கள் .
*Cenosillicaphobia என்றால் பீர் அருந்தும் போது நமது கோப்பை காலியாகிவிடுமோ என்கிற அச்சமே ஆகும்.
*கரப்பான்பூச்சிகளுக்கு பீர் மிகவும் பிடிக்கும் ( அதிலிருக்கும் ஈஸ்ட்களால் கவரப்பட்டதால் இருக்கலாம்) உங்கள் வீட்டில் கரப்பான் தொல்லை இருந்தால் ஒரு கப்பில் பீர் வைத்து அதில் கொஞ்சம் எலி விஷம் கலந்து வைத்து விட்டால் போதும் மொத்த கரப்பான்களும் அழிந்து விடும்.
*உலகில் டீக்கு அடுத்து அனைவராலும் விரும்பி அருந்தப்படுகிற பானம் காபி அல்ல '' பீர் ''.
போதை தொடரும்..........
டிஸ்கி - மது நாட்டுக்கு வீட்டுக்கு உயிருக்கு மற்றும் உங்கள் பாக்கட்டுக்கும் கேடு.
*********************
அவ்ளோதான்பா ;-)
**********************
பிகு : இந்தபதிவின் தகவல்கள் பல இடங்களில் இருந்தும் சேகரித்த தகவல்களின் தொகுப்பு , அவை எந்த ஒரு ஆங்கில பதிப்பின் மொழி பெயர்ப்பல்ல . இப்பதிவை வேறெங்கும் மீண்டும் பதிவிடவோ அல்லது மின்னஞ்சலில் அனுப்பினாலோ அல்லது பிறருடன் பகிர்ந்து கொண்டாலோ தயவுசெய்து எனது வலைப்பதிவின் முகவரியை குறிப்பிடவும் . நன்றி