எனக்கு மின்னஞ்சலில் நமது வலைப்பூவை வாசிக்கும் ஒரு பெண் வாசகி அனுப்பிய ஒரு காதல் கடிதம் . இந்த கடிதத்தை கண்டதும் ஒரே அதிர்ச்சி , சே இப்படியும் ஒரு பெண் இருப்பாரா என்று , அப்படி ஒரு கடிதம் . அதுவும் பக்கம் பக்கமாக கூட இல்லை நான்கே வரி .
அந்த காதல் கடிதம் உங்கள் பார்வைக்கு..... நீங்களும் படித்து அந்த பெண்ணை கடிந்து கொள்ளுங்கள் .
പ്രിയനേ,
അങെങ്ഴുതുന്ന ഓരോ വരികളിലും ഞാ൯ അങയെ സ്നേഹിക്കുന്നു. അങിലാതെ ഞാനില്ല. എന്നെ
മനസിലാകുമെന്നു കരുതുന്നു. വരവും കാത്തു ഞനിരിക്കും.
പിരിഞിരിക്കുന്ന ഓരോ നിമിഷവും എനിക്കു ഓരോ വ൪ഷങളാകുന്നു.
സ്നേഹപൂ൪വം
ചി൯മയ
இப்போது தெரிகிறதா நான் ஏன் கோபமடைந்தேன் என்று , இப்படியா கடிதம் எழுதுவது ,அதனால் கோபமடைந்த நான் வேறு வழியின்றி ,
அந்த பெண்ணிடம் இனிமேல் இது போல கடிதம் போடுவதாக இருந்தால் கல்தோன்றி மண்தோன்றா காலத்தே முன்தோன்றி மூத்த தமிழில் போடுமாறும் அறிவுருத்தியுள்ளேன்.
மலையாளத்தில் ஷகிலாவையும் மம்முட்டியையும் மட்டுமே அறிந்த இந்த பிஞ்சு நெஞ்சு ( என்னோடதுங்க ) முதல் முறையா ஒரு மலையாள கடிதம் கண்டதும் அதிர்ச்சியாகி நண்பனிடம் கொடுத்து படிக்க சொன்னால் அந்த நாலு வரியில் அத்தனை அழுத்தம் . ம்ம் ....தமிழ்ல ஒருத்தர் கூட இப்படிலாம் கடிதம் போடறதில்ல . என்ன பண்ண விதி வலிய்து .
அதானால வாசகர்களே வாசகிகளே நீங்க என்ன திட்டறதா இருந்தா கூட தமிழ்ல திட்டுங்க , இந்த மாதிரி புரியாத பாஷைலலாம் கடிதம் போட்டு கலாய்க்காதீங்க . உங்களுக்கு இதுல என்ன எழுதிருக்குனு படிக்க முடியலனா எனக்கு தனி மெயிலில் கேட்கவும் . நானே சொல்றேன் ஏன்னா அதெல்லாம் இங்க எழுத முடியாது , மக்கள் ஏற்கனவே A FOR ATHISHA னா அடல்ஸ்ஓன்லி அதிஷானு நினைக்கிறாங்க. அதான்பா தன்மானப்பிரச்சனை .
____________________________________________________________________________________
அவ்ளோதான்பா ;-)
____________________________________________________________________________________