பதிவர் பாலபாரதி அவர்கள் எழுதிய '' அவன்-அது=அவள் '' புத்தக வெளியீட்டு விழா சில நாட்களுக்கு முன் சென்னையில் நடந்தது .
*இவ்விழா ஆகஸ்ட் மாதம் 30 ஆம் தேதி சென்னை பார்வதி மினிஹாலில் மாலை 6.30க்கு தொடங்கியது.
* இவ்விழாவிற்கு கார்ட்டூனிஸ்ட் பாலா தலைமையேற்றார் . அவர் பாலாவுடனான நட்பு குறித்தும் இப்புத்தகம் உருவாக அவர் எடுத்துக்கொண்ட முயற்சிகள் குறித்தும் பேசினார்.
*புத்தகத்தை சிவஞானம் ஐயா வெளியிட லிவில்ஸ்மைல் வித்யா பெற்றுக்கொண்டார்.(படத்தில் நடுவில் இருப்பவர் கார்ட்டூனிஸ்ட் பாலா)
*புத்தகம் குறித்த விமர்சனத்தை தோழர் அ.மார்கஸ் வழங்கினார்
*ஒளிப்பதிவாளர் விஜயகுமார் மற்றும் தோழர் பாட்டாளி அவர்களும் வாழ்த்துரை வழங்கினர்.
*பதிவர்கள் பைத்தியக்காரன்,சுகுணாதிவாகர்,ஆழியுரான்,டோண்டு ராகவன்,மருத்துவர்.புருனோ, கென் , கென்னின் நண்பர் அகிலன் , உலக வானொலி பற்றி எழுதி வரும் பதிவர் மகாலிங்கம், வெண்பூ , நர்சிம் ( அவரது நண்பர்) , கடலையூர் செல்வம் , அது தவிர ஒரு வலைப்பதிவு வாசகர் (பெயர் நினைவில் இல்லை ) , கடைசி நேரத்தில் பதிவர் மக்கள்சட்டம் சுந்தர்ராஜன் வந்து சேர்ந்தார் . இன்னும் பல பதிவர்களும் வந்திருந்தனர் பெயர் தெரியவில்லை .
*விழா அரங்கிலேயே பாலாவின் புத்தக விற்பனை ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது , விழா முடிந்தபின் அந்த புத்தக விற்பனையாளிடம் கேட்ட போது 50க்கும் மேற்பட்ட மக்கள் வந்திருந்தும் 15 புத்தகங்கள் மட்டுமே விற்றுள்ளதாக கூறினார் . (கவலையாக இருந்தது)
*விழா முழுவதுமே பதிவர் பாலபாரதி படபடப்புடன் காணப்பட்டார் . (விழாவிற்கு அவரது மனைவியும் வந்ததால் இருக்கலாம்)
*விழா முழுவதுமே பதிவர் பாலபாரதி படபடப்புடன் காணப்பட்டார் . (விழாவிற்கு அவரது மனைவியும் வந்ததால் இருக்கலாம்)
*விழாவில் கலந்து கொண்டு சிறப்பித்த அனைவருக்கும் தேநீர் விருந்து கொடுக்கப்பட்டது.
*விழாவிற்கு வந்த அனைவரையும் பாலபாரதி தனது மனைவி மலர்வனம் லட்சுமியுடன் தம்பதி சமேதராய் வரவேற்றது மிக சிறப்பாகவும் மகிழ்ச்சி அளிப்பதாயும் இருந்தது .
*பதிவர் லிவிங் ஸ்மைல் வித்யா நிகழ்ச்சி முழுவதையுமே தனது ஹேண்டிகேமில் பதிவாக்கிக் கொண்டிருந்தார்
*பதிவர் வெண்பூ அவரது ஜீனியரை அழைத்து வந்திருந்தார் , குட்டி வெண்பூ விழாவையே கலகலப்பாக்கினார்.
* தன் வீட்டு விசேடம் போல தோழர் லக்கி மற்றும் நண்பர் முரளிகண்ணன் அவர்களும் மாங்கு மாங்கென்று உழைத்து நிகழ்ச்சியை வெற்றிகரமாய் முடிக்க உதவினர் .
*பதிவர்கள் பலரும் கும்பல் கும்பலாக நின்று பல விடயங்களை பற்றியும் விவாதித்தனர் .
*இரவு 8.30க்கு விழா முடிந்தது . பதிவர் சந்திப்பு மேலும் அரைமணிநேரம் தொடர்ந்தது.