Pages

11 August 2008

FLASH NEWS : ஒலிம்பிக்கில் இந்தியா தன் முதல் தங்கத்தை வென்றது




துப்பாக்கி சுடுதல் - இந்தியாவின் அபினவ் பிந்த்ரா தங்கம் வென்றார்பெய்ஜிங்: பெய்ஜிங் ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவின் அபினவ் பிந்த்ரா 10 மீட்டர் ஏர் ரைபிள் துப்பாக்கிச் சுடும் போட்டியில் தங்கம் வென்றார்.


இதன் மூலம் கடந்த 28 ஆண்டுகளில் ஒலிம்பிக் போட்டிகளில் முதல் முறையாக தங்கத்தை வென்றுள்ளது இந்தியா.இந்தப் போட்டியில் சீனாவின் கியூனான் சூ வெள்ளி பதக்கமும், பின்லாந்தின் ஹென்றி ஹாக்கினன் வெண்கலப் பதக்கமும் வென்றனர்.


ஒலிம்பிக் போட்டிகளில் 28 ஆண்டுகளுக்குப் பின் இந்தியா வென்றுள்ள முதல் தங்கப் பதக்கம் இது தான் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ஒலிம்பிக்கில் இந்தியா வென்றுள்ள முதல் பதக்கமும் இது தான்.


மேலும் ஒலிம்பிக் வரலாற்றில் இந்தியாவின் சார்பில் தனி நபர் வென்றுள்ள முதல் தங்கப் பதக்கமும் இது தான்.


பதக்கம் வென்ற பின் பிந்த்ரா கூறுகையில், இது எனக்குக் கிடைத்த வெற்றியல்ல, இந்தியாவுக்குக் கிடைத்த வெற்றி என்றார்.தங்கம் வென்ற பிந்த்ராவுக்கு ஜனாதிபதி பிரதீபா பாட்டீல் வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.


________________________________________________________________



ஆண்கள் துப்பாக்கி சுடுதல்(ஏர் ரைபிள்): இந்திய வீரர் தங்கம் வென்றார்பீஜிங்: பீஜிங் ஒலிம்பிக்கில் இன்று நடந்த ஆண்களுக்கான 10மீ., துப்பாக்கி சுடுதல்(ஏர் ரைபிள்) பைனலில் இந்தியாவின் அபினவ் பிந்த்ரா தங்கம் வென்றார். தனி நபர் போட்டியில் இந்தியா தங்கம் பெறுவது இது‌வே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.


அபினவ் பிந்த்ரா மூலம் இந்தியா வரலாறு படைத்துள்ளது. இதன்மூலம் பீஜிங் ஒலிம்பிக்கில் முதல் தங்கம் வென்ற இந்தியர் என்ற பெருமை பெற்றார். இந்த வெற்றியின் மூலம் இந்தியா பதக்கப்பட்டியலில் இடம் பிடித்தது.


சீனாவின் கியூனான் சூ வெள்ளி பதக்கமும், பின்லாந்தின் ஹென்றி ஹாக்கினன் வெண்கலப் பதக்கமும் பெற்றனர்.

Source: http://www.thatstamil.com/, http://www.dinamalar.com/


112 கோடி மக்களின் பிரதிநியாக தங்கம் வென்ற ,

"தங்க இந்தியன் " அபினவ் பிந்த்ராவுக்கு வாழ்த்துக்கள் !!


"PROUD TO BE A INDIAN !!!"
___________________________
மின்னஞ்சலில் அனுப்பிய நண்பர் heartaz க்கு மிக்க நன்றி