Pages

17 March 2008

சிறுதொட‌ர்க‌தை : வலியில்லா வலி ‍‍‍பாக‌ம் 1

வலியில்லா வலி ‍‍‍பாக‌ம் 1 :
தினமும் அந்த பாலத்தை சரியாக 9.00 மணிக்கு கடப்பதை நான் பழக்கமாக கொண்டிருந்த்தேன் . அது என் வாழ்க்கையின் ஒரு பாகமாக ஆகிவிட்டிருந்தது . இப்போது மணி என்ன , தெரியவில்லை , அடுத்த மாதத்திற்க்குள் பணம் சேர்த்து கடிகாரம் வாங்க வேண்டும் என எண்ணிய படி எதிரில் வந்த அந்த படித்த பணக்காரரிடம் "ஐயா மணி என்னங்க? " என நான் வினவ அவர் என்னை ஒரு முறை மேலும் கீழும் அளந்தபடி " 8.50 " என்றது அவர் வாய் மட்டும் சொன்னது அவர் கண்களோ இன்னமும் என் அழுக்கடைந்த உடைகளையும் சவரம் செய்யாத என் தாடியையும் மேய்ந்து கொண்டிருந்ததை என்னால் நன்றாக உணர முடிந்தது , அவன் மனது என்னை பைத்தியக்கரன் என எண்ணுவதை உணர முடிந்த்தது . இவ்வேளையிலும் அடடா இன்னும் 10 நிமிடம் தானே இருக்கு என்று மனது மகிழ்ச்சியால் துடிப்பதையும் என்னால் உணர முடிந்தது .

அவ‌ளை முத‌ன் முத‌லில் அந்த‌ பால‌த்தில் தான் பார்தேன் , அது ஒன்றும் பெரிய பாலம் இல்ல ஒரு ஆள் உய‌ர‌ம் தான் இருக்கும் .ஊருக்கு ஒதுக்கு புரமாய் இருக்கும் . பாலத்தின் கிழே பெரிய சாக்கடை மட்டும் தான் , ஒரு நாள் அவசரதிற்க்கு மறைவா ஒதுங்க போயி வெளிய வர கண் முன்னால அவள் ,அவள் என்னை பார்த்து சின்னதா சிரித்து விட்டு போக , அன்றைக்கு உறைந்தவன் தான் இன்னமும் உருகலையே , தினமும் அவளை பார்க்கவில்லை எனில் நான் ஒரு மிருகமாய் மாறி விடுவது எனக்கே தெரியும் . அவளை பற்றி இது வரை ஒன்றும் தெரியாது . ஊர் பெயர் விலாசம் எதுவும் தெரிந்து கொள்ள ஆர்வம் இல்லை . அவள் தினமும் காலை 9.00 மணிக்கு சரியாக வந்து விடுவாள் , நான் அவளுக்கு அரை மணி நேரம் முன்பே வந்து காத்திருப்பேன் . அவள் என்னை கடக்கும் போது காட்டும் புன்முறுவலுக்காகவும் என் மேல் விழும் ஒரு நொடி பார்வைக்காகவும் அரை மணி நேரம் என்ன 500 வருடங்கள் வேண்டுமானாலும் காத்திருக்கலாம் . நானும் எத்தனையோ நாள் என் காதலை அவளிடம் சொல்லி விட நினைப்பதுண்டு ஆனால் அவளை கண்டாலே உறைந்த பனி கரடி போல் செயலற்று போகிறேன் . இன்றோடு நான் அவளைப் பார்த்து 1 வருடம் முடிய போகிறது . இன்று எப்படியாவது என் காதலை அவளிடம் சொல்லியே தீர்வது என்ற உறுதியோடு வந்திருக்கிறேன் . நிச்சயம் சொல்லி விடுவேன் . நிச்சயம் சொல்லி விடுவேன் .
அந்த சைக்கிள் தூரத்தில் வருவது தெரிய ஆரம்பிக்க இதயம் இன்னும் வேகமாக துடிப்பது கூட நன்றாக தான் இருந்தது . இதோ அவள் வந்து விட்டாள். என்றைக்கும் போல் இன்றும் ஏமாற்றம்தானா ?
தொட‌ரும்............................................................?