ஒரு சிறிய கதை :
ஜென் துறவி ஒருவரை தூக்கிலிட உத்தரவிட்ட அரசன், துறவியை நோக்கி "உன்க்கு இன்னமும் 24 மணி நேரம்தான் இருக்கிறது,நீ அதை எப்படி வாழ விரும்புகிறாய் ? " என கேட்டான். துறவி சிரித்து கொண்டே "எப்போதும் வாழ்வது போல் நொடிக்கு நொடி , என்னை பொறுத்தவரையில் இந்த கணத்துக்கு மேல் எதுவும் கிடையாது , எனவே எனக்கு 24 மணி நேரமும் 24 வருடமும் ஒன்று தான், நான் எப்போதும் கணத்துக்குக் கணம் வாழ்ந்து வந்திருப்பதால் எனக்கு இந்தக் கணமே அதிகம் தான் , 24 மணி நேரம் என்பது மிக அதிகம் , இந்த ஒரு கணமே போதும்" என்றார்.
படித்தது : ஓஷோவின் எதிர்ப்பிலேயே வாழுங்கள்
இக்கதையை படித்தவுடன் இன்றைய நகர சூழலிலே இது போல் ஒரு நொடியேனும் நான் வாழ்கிறேனா? எனது தின அலுவல்களை ( சென்னையின் பெரும்பாலான மக்களின் அலுவல்களும் இது போன்றவயே ) சிந்தித்து பார்க்கையில் இது சாத்தியமா என எண்ணத்தோன்றியது.